IBPS Clerk Recruitment 2024 : 6,128 கிளர்க் காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் கிளர்க் (Clerk) காலிப்பணியிடங்களுக்கான (IBPS Clerk Recruitment 2024) அறிவிப்பை ஐபிபிஎஸ் Institute Of Banking Personnel Selection (IBPS) எனும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 6,128 கிளர்க் (Clerk) காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 665 காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.

ஐபிபிஎஸ் Institute Of Banking Personnel Selection (IBPS) எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள மற்ற பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

IBPS Clerk Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள கிளர்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கு 6,128 காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த கிளர்க் (Clerk) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த கிளர்க் (Clerk) பணியிடங்களுக்கு (IBPS Clerk Recruitment 2024) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.07.2024 தேதி வரை 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : பொதுத்துறை வங்கியில் காலியாக இருக்கும் கிளர்க் (Clerk) பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு படிநிலைகள் உண்டு. மேலும் இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த கிளர்க் (Clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.ibps.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  6. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த கிளர்க் (Clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆகும். மேலும்  SC/ST, PWD, EXSM பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.175 ஆகும்.

  7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த கிளர்க் (Clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.07.2024 ஆகும்.

  8. மேலும் விவரங்கள் அறிய : https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply