IBPS RRB Clerk Vacancy 2024 : வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வங்கி பணியாளர் தேர்வாணையம் வங்கிகளில் உள்ள உதவி அலுவலர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்கான விவரங்களை காணலாம்.  

பணியிட விவரங்கள் (IBPS RRB Clerk Vacancy 2024):

பணியிடங்கள்:

 அதிகாரி – குரூப் “A” Officers (Scale- I, II & III)

 உதவி அலுவலர் (Group “B”)

இந்த பணிகளுக்கு தமிழ்நாடு வங்கிகளில் மட்டும் 337 பணியிடங்கள் உள்ளன. மேலும் மொத்தமாக 9,995 பணியிடங்கள் காலியாக உள்ளன. 

 கல்வித்தகுதி:

(I). 21.07.2023 தேதியின்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு இருக்க வேண்டும்.

 (II). உள்ளூர் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆபீசர் ஸ்கேல் I, II, III கிரேடுகளில் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(III). சிறப்பு அதிகாரிகள் பணிக்கு கணக்காளர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் 1-2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும், பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பட்டியல் பழங்குடியின பிரிவினர், PwBD/EXSM ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ibpsonline.ibps.in/crpcl13jun23/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://ibps.in/wp-content/uploads/CRP_RRBs_XIII_7.6.24.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27/06/2024.

Latest Slideshows