ICC Players Ranking 2023 : இந்திய அணி வீரர்கள் முன்னேற்றம்

ICC Players Ranking 2023 :

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் (ICC Players Ranking 2023) இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறார்கள். லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை எதிர்த்து இந்தியா விளையாடியது. இதில் நேபாள அணிக்கு எதிராக கில் அபாரமாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் (ICC Players Ranking 2023) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தற்போது அவர் 750 புள்ளிகளை எட்டியுள்ளார். அவருக்கும் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் வாண்டர் டூசனுக்கும் இடையே 27 புள்ளிகள் மட்டுமே உள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் நேபாளத்துக்கு எதிராக 151 ரன்கள் குவித்து 882 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இஷான் கிஷான் :

அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக மற்றொரு நட்சத்திர வீரர் இஷான் கிஷான் அபாரமாக விளையாடி 82 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 624 புள்ளிகளுடன் 12 இடங்கள் முன்னேறி 24வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 695 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 690 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளனர்.

முதல் 25 இடங்களில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் மட்டுமே உள்ளனர். அதேபோல் இந்திய அணி வீரர்கள் பந்துவீச்சிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். முகமது சிராஜ் எட்டாவது இடத்திலும், குல்தீப் யாதவ் 12வது இடத்திலும், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா 35வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட் முதலிடத்தில் உள்ளார். முதல் 20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள ஒரே வீரர் ஹர்திக் பாண்டியா மட்டுமே.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி, ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்திற்கு வந்துள்ளார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா 5 இடங்கள் முன்னேறி 15வது இடத்திற்கு வந்துள்ளார்.

டர்பனில் நடந்த தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான பரபரப்பான தொடர் மற்றும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்குப் பிறகு வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் 3வது இடத்திலும் உள்ளார்.

டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply