ICC Rankings : ஐசிசி தரவரிசை பட்டியல் | இந்திய அணி வீரர்கள் முன்னேற்றம்

ICC Rankings :

ஐ.சி.சி பேட்டிங் தரவரிசையில் (ICC Rankings) இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிச் சுற்றில் ஒரு காலை வைத்து விட்டதாக தெரிகிறது. இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் பலரின் சிறப்பான பேட்டிங் பார்ம் இதற்கு முக்கிய காரணம்.

விராட் கோலி :

ICC Rankings : இந்தியாவின் விராட் கோலி 5 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 354 ரன்களும், ரோஹித் சர்மா 5 போட்டிகளில் 311 ரன்களும் குவித்துள்ளனர். அதேபோல் இந்திய அணியின் சிராஜ், குல்தீப் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். பும்ரா 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும், சிராஜ் 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனால் ஐசிசி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசையிலும் மாற்றம் (ICC Rankings) செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். டேவிட் வார்னர் 5வது இடத்தை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தவிர, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 2-வது இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் சுப்மான் கில் இடையே 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் உலகக் கோப்பை தொடரில் 3 சதங்கள் அடித்த டி காக் பேட்ஸ்மேன்கள் 3வது இடத்துக்கும், கிளாசன் 4வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

அதேபோல், பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் சிராஜ் 2வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் மற்றொரு நட்சத்திரம் குல்தீப் யாதவ் 9வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் 5 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply