ICC World Cup 2023 Pakistan: பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிப்பு…

உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், இரண்டு போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 10 மைதானங்களில் மொத்தம் 48 போட்டிகளை நடத்துவதற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் கோரிக்கை

அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.மேலும் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில், ஐசிசி அட்டவணை வெளியிடுவதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளத்தின் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.

அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா சேப்பாக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே பெங்களூரு மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் போட்டியை ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போட்டியாக மாற்ற ஐசிசியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஐ.சி.சி மறுப்பு :

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது, ஐசிசி அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது. இதன்படி அக்டோபர் 20-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவையும், 23-ம் தேதி பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த இரு போட்டிகளும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

ஏனெனில் சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியிலும் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளார். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அளவில் சிறியதாக இருப்பதால் அதிக சிக்ஸர்கள் அடிக்க முடியும். இது பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் அட்டாக் செய்யும் வீரர்கள் அதிகம் என்றும், பாகிஸ்தான் அணி அதிக பாதிப்புக்கு உள்ளானது என்றும் ரசிகர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக பாதுகாப்புக் கவலைகள் இருந்தால் மட்டுமே மைதானம் மாற்றப்படும். 2016ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி பிசிசிஐயின் கோரிக்கையை அடுத்து போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply