Ice Apple Benefits in Tamil: கோடையை சமாளிக்க இயற்கை தரும் கொடை நுங்கு!!
கோடைக்கு என்றே இயற்கை நமக்கு பல பொக்கிஷங்களை வழங்கி உள்ளது. அதில் ஒன்று தான் இந்த நுங்கு. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு கோடையின் பெரிய பொக்கிஷம் என்றே சொல்லவேண்டும். இந்த பனை மரம் எந்த ஒரு பராமரிப்பு இன்றியும் தானாகவே வளரக்கூடியது. நிலத்தடி நீரை தக்க வைக்கும் தன்மைக்கொண்டது. இந்த பனை மரத்தில் இருந்து பெறப்படும் பனங்கற்கண்டு, பனை வெல்லம், பனங்கிழங்கு, நுங்கு, பதனிர் இவை அனைத்தும் அற்புத மருத்துவ நன்மைகளை கொண்டது. அந்த வகையில் நுங்கின் நன்மைகளை தான் இப்பதிவில் காணப்போகிறோம்.
Ice Apple Benefits Lists:-
அல்சர் பிரச்சனை:
அல்சர் உள்ளவர்கள் வெயில் காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள் இவர்கள் மிதமான காரமுள்ள உணவுகளை சாப்பிட்டால் கூட வயிறு எரிய தொடங்கும் இந்த பிரட்சனை உள்ளவர்கள் தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் வயிறு எரியாது. தொடர்ந்து சாப்பிடும்போது அல்சரும் குணமாகும்.
உடல் சூட்டை தணிக்க:
கோடைக்காலம் என்றாலே நிறைய பேருக்கு உடல் உஷ்னம் சம்பந்தமான பிரட்சனைகள் வரக் கூடும். அதிலும் உடல் சூடு உள்ளவர்களுக்கு கோடைக்காலம் பெரும் அவதிப்படும் காலமாக இருக்கும். இவர்கள் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் குறையாது. உடல் வறட்சி அடைந்து தொடர்ந்து தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். செயற்கை குளிர்பானங்கள் தொண்டைக்கு இதமளித்தாலும் அவை ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது. இவர்கள் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைவதோடு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
உடலின் நீர் இழப்பை தடுக்க:
கோடையில் ஏற்படக்கூடிய நீர் இழப்பை தடுக்கக்கூடியது இந்த நுங்கு. பொதுவாக அதிக வெப்பத்தால் வேர்வையின் மூலமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு சிலருக்கு மயக்கம் ஏற்படும். அதாவது அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து இரத்த ஓட்டத்தில் குறைபாடும், ஹீட் ஸ்ட்ரோக் போன்ற மயக்க நிலையும் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. இவர்கள் தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் நீர் இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
அம்மை நோயை ஏற்படாமல் தடுக்க:
கோடைக்காலத்தில் பரவக்கூடிய நோய்தான் அம்மை நோய். கோடையில் வெப்பம் அதிகரிப்பதாலும், ஒரு சில கிருமிகள் கோடைக்காலத்தில் பல்கி பெருகுவதாலும் சின்னமை, பெரியம்மை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் உடலுக்கு வலு சேர்க்கக்கூடிய உணவாகவும், அம்மை நோய் வராமல் தடுக்க கூடிய ஒரு உணவாகவும் இந்த நுங்கு உள்ளதால் எல்லோரும் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால் அம்மை வராமல் தடுக்கலாம்.
உடல் உறுப்புகளின் நன்மைகள்:
நுங்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கி கல்லீரல் பலம் பெரும், கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும். அதே போன்று இந்த நுங்கு நீர்ச்சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் கொண்ட ஒரு இயற்கை உணவாகும். இது வயிறு மற்றும் குடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கச் செய்கிறது. அதே போன்று உடலில் வெப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேலையை செய்பவர்கள், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களுக்கு எளிதில் நீர்ச்சக்தி இழப்பு ஏற்படுவதோடு பிற அத்தியாவசிய சத்துக்களும் உடலை விட்டு வெளியேறுகிறது. இவர்கள் தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் உடலில் இழக்கும் சத்துக்களை மீண்டும் சரி செய்யலாம்.
கர்பிணிகளுக்கான நன்மைகள்:
கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு அடிக்கடி செரிமான பிரட்சனைகள் ஏற்பட்டு நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரட்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இவர்கள் நுங்கு சாப்பிட்டுவந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். முக்கியமாக கர்ப்பகால ஒவ்வாமையை போக்கவும், ஹார்மோன் சுரப்பிகள் சீராக இயங்கவும் இவர்கள் அடிக்கடி நுங்கு சாப்பிடுவது முக்கியம். அதே சமயம் அளவோடு சாப்பிடுவதும் அவசியம்.
பெண்களுக்கான நன்மைகள்:
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க கோடை காலங்களில் தாராளமாக கிடைக்கும் இயற்கை உணவான இந்த நுங்கை தினமும் சாப்பிட்டு வர நல்லது. காரணம் இதிலுள்ள ஆன்தோ சைனின் என்னும் வேதியப்பொருள் மார்பக புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதில் சிறந்த ஒன்றாக உள்ளது.
வேர்க்குரு பிரட்சனை:
கோடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேர்க்குரு பிரட்சனைகளுக்கு உள்ளாவர்கள் இவர்கள் நுங்கு சாப்பிடுவதோடு இல்லாமல் அவ்வப்போது வேர்குருவின் மீது தடவி வந்தாலும் வேர்க்குரு மறையும். அதே போன்று வெயிலால் வரும் சூட்டு கொப்பளங்கள் கூட நுங்கு தண்ணீர் தடவி வந்தால் எரிச்சல் நீங்கி குணமாகும்.
கண் பிரட்சனை:
சிலர்க்கு கோடைக் காலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தாலும், அதிக நேரம் கண் விழித்திருக்கும் போதும் கண் எரிச்சல், கண்வலி போன்றவைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இவர்கள் தினமும் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால் கண் சம்மந்தமான நோய்கள் நீங்குவதோடு, கண் பார்வையும் அதிகரிக்கும்.
நுங்கினை மேல் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. நிறைய பேர் நுங்கு சாப்பிடும் போது அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் சதை பகுதியை மட்டும் சாப்பிடுவார்கள் ஆனால் துவர்ப்பாக இருக்கும் நுங்கின் தோல் பகுதியில்தான் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்றவை அடங்கியுள்ளன. எனவே நுங்கு சாப்பிடும்போது தோலுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
முக்கியமாக நுங்கை வாங்கிய சில மணி நேரங்களில் பயன்படுத்திட வேண்டும். இந்த குளிர்சாதன (Fridge) பெட்டியில் வைத்து பயன்படுத்தக் கூடாது. முக்கியமாக அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போதும் செரிமான பிரட்சனைகள் ஏற்பட கூடும். நுங்கில் அபாரமான மருத்துவ பயன்கள் இருப்பதால் அளவோடு அடிக்கடி சாப்பிடுவது நல்லது.