IDBI Bank Jobs : 2100 பணியிடங்கள் | டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐ.டி.பி.ஐ வங்கியில் (IDBI Bank Jobs) 2100 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர்எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான (IDBI) வங்கி நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் இளநிலை உதவி மேலாளர் மற்றும் நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

IDBI Bank Jobs :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ஐ.டி.பி.ஐ வங்கியில் Junior Assistant Manager பதவிக்கு 800 காலிப்பணியிடங்களும் Executives – Sales And Operations (ESO) பதவிக்கு 1300 காலிப்பணியிடங்களையும் (IDBI Bank Jobs) சேர்த்து மொத்தம் 2100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் (UG) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  1. வயதுத் தகுதி (Age) : 01.11.2023 தேதி வரை 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. சம்பளம் (Salary) : ஐ.டி.பி.ஐ வங்கியில் Junior Assistant Manager பதவிக்கு (IDBI Bank Jobs) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.14 – ரூ.6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் Executives – Sales and Operations பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் வருடத்தில் மாதம் ரூ.29,000 இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.31,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : ஐ.டி.பி.ஐ வங்கியில் Junior Assistant Manager  பணியிடங்களுக்கு (IDBI Bank Jobs) ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் Executives – Sales And Operations (ESO) நிர்வாகி பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள், கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள், ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள், பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தமாக 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்விற்கான கால அளவானது 2 மணி நேரம் ஆகும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். இந்த தேர்வில் தவறாக பதிலளிக்கும்  வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பதவிகளுக்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx அல்லது https://ibpsonline.ibps.in/idbiesonov23/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  1. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த பதவிகளுக்கு SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.200 ஆகவும் மற்ற பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  1. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் (IDBI Bank Jobs) ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 06.12.2023 ஆகும்.
  1. மேலும் விவரங்களுக்கு : https://www.idbibank.in/pdf/careers/Detailed_-Advertisement.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply