IDBI Recruitment 2023 : IDBI வங்கியில் ரூ.6.50 லட்சம் வரை மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான IDBI Bank Limited இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில், Junior Assistant Manager காலியிடங்களுக்கான (IDBI Recruitment 2023) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

IDBI Recruitment 2023 - பணியிட விவரங்கள் :

  • பணி: இளநிலை உதவி மேலாளர் ( Junior Assistant Manager )
  • காலி பணியிடங்கள்: 600

IDBI Recruitment 2023 - கல்வித்தகுதி :

  • இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IDBI Recruitment 2023 - வயது வரம்பு :

  • 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IDBI Recruitment 2023 - விண்ணப்பக் கட்டணம் :

  • பட்டியல் சாதியினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

நிபந்தனைகள் :

  • ஐடிபிஐ வங்கி பெங்களூரில் உள்ள மணிப்பால் கல்வி சேவைகள் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நிட்டே ஆகியவற்றுடன் இணைந்து IDBI வங்கி, வங்கியியல் மற்றும் நிதித்துறையில் 1 வருட முதுகலை டிப்ளமோ சான்றிதழ் படிப்பை வழங்கி வருகிறது. 9 மாதங்கள் பாடநெறியாகவும், 3 மாதங்கள் பயிற்சி வகுப்பாகவும் இருக்கும். இந்த முதுகலைப் பட்டதாரி சான்றிதழைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
  • ஆண்டு பயிற்சி கட்டணம் ரூ.3 லட்சம் வரை. மொத்த தொகைக்கு பதிலாக ஒரு வருடத்திற்குள் தவணை முறையில் செலுத்தலாம். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. 6 மாத பயிற்சி காலத்திற்கு மாதம் ரூ.5000 மற்றும் இரண்டு மாத பயிற்சி காலத்திற்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். பயிற்சிக் காலத்திற்குப் பிறகு நியமிக்கப்படும் இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு ரூ.6.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மற்றும் விவரங்களை அறிந்துகொள்ள https://www.idbibank.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30, 2023.

Latest Slideshows

Leave a Reply