IDBI Recruitment 2024 : ஐடிஐபி வங்கியில் 1000 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிஐபி வங்கிக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகள் உள்ளது. இந்த வங்கியில் மட்டும் சுமார் 20000 ஆயிரம் ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள நிர்வாகி பணியிடங்களை (IDBI Recruitment 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

IDBI Recruitment 2024

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

ஐடிஐபி வங்கியில் இந்த நிர்வாகி Executive – Sales And Operations பணியிடங்களுக்கு மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வித் தகுதி (Educational Qualification)

இந்த நிர்வாகி Executive – Sales And Operations பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்த நிர்வாகி Executive – Sales And Operations பணியிடங்களுக்கு (IDBI Recruitment 2024) 1.10.2024 தேதி வரை 20 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதில் தளர்வு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

ஐடிஐபி வங்கியில் இந்த நிர்வாகி Executive – Sales And Operations பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் வருடம் ரூ.29000 ஆயிரமும், இரண்டாம் வருடம் ரூ.31000 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

ஐடிஐபி வங்கியில் இந்த நிர்வாகி Executive – Sales And Operations பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மெடிக்கல் டெஸ்ட் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (IDBI Recruitment 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் தேர்வானது இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

6. விண்ணப்பிக்கும் முறை (Application Process)

இந்த நிர்வாகி Executive – Sales And Operations பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.idbibank என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)

இந்த நிர்வாகி Executive – Sales And Operations  பதவிக்கு தேர்வு கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1050 ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

ஐடிஐபி வங்கியில் இந்த நிர்வாகி Executive – Sales And Operations பணியிடங்களுக்கு (IDBI Recruitment 2024) விண்ணப்பிக்க கடைசி தேதி  16.11.2024 ஆகும்.

9. மேலும் விவரங்களுக்கு

https://www.idbibank.in/pdf/careers/ESO-2025-26.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply