IFHRMS இணையதளம் மேம்படுத்தப்படும் - தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

  • தமிழக அரசு ஆனது தமிழக அரசு ஊழியர்களுக்கு மாநில நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் (IFHRMS) கீழ் சம்பளம் வழங்குகிறது. இதற்காக ஆன்லைன் (www.karuvoolam.tn.gov.in) என்ற வசதி தமிழக அரசு செய்துள்ளது.
  • இந்த IFHRMS இணையதளத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப மாற்றங்கள் 22.12.2023 முதல் 01.01.2024 வரை மேற்கொள்ளப்படும். 2024 புத்தாண்டில் இருந்து நவீன மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையதளத்தை தமிழக அரசு ஊழியர்கள் பயன்படுத்தலாம்.

IFHRMS (Integrated Financial And Human Resource Management System - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு) :

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு ஆனது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஆனது கணக்குகள் மற்றும் கருவூலங்களின் பிரிவில் செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு ஆனது கணினி காகிதமற்ற பணிச்சூழலை வழங்குகிறது. IFHRMS அமைப்பு தமிழ்நாட்டின் நிதித் துறையின் சரியான செயல்பாட்டிற்காக இந்த அமைப்பு ஆனது குறிப்பாக தமிழ்நாட்டு ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பரிவர்த்தனைகளை திறம்பட மேம்படுத்த உதவுகிறது.

Payslip விவரங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது மற்றும் பதிவிறக்க விருப்பத்தையும் வழங்குவது போன்ற பல்வேறு அம்சங்களை கணினி வழங்குகிறது. இது கடன் விவரங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் கார்ப்பரேட் மற்றும் நிதி பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இது சுமூகமான பரிவர்த்தனைகளையும் அதன் புதுப்பிப்பையும் எளிதாக்குகிறது.

நவீன தொழில்நுட்ப மேம்பாடுகள் :

தமிழக அரசு ஊழியர்கள் 2024 புத்தாண்டில் இருந்து நவீன மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையதளத்தை பயன்படுத்தலாம். இந்த மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையதளம் ஆனது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செயல்பாடுகளை மிகவும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால தேவைகளை திறம்பட பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையதளம் ஆனது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவையை உறுதி செய்யும் வகையில் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையதளம் சேவைகளை கச்சிதமாக செய்து முடிக்கும்.  டிஜிட்டல் சம்பள பில்லையும் இந்த இணையதளம் மூலம் Download செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு அறிவிப்பு –  தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி : தமிழக அரசு ஆனது தமிழக அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இந்த மிகவும் முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழக அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட இணையதளத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் 22.12.2023 முதல் 01.01.2024 வரை மேற்கொள்ளப்படும். மேலும் டிசம்பர் 2023-ன் கடைசி வேலை நாளான 29.12.2023 அன்று நடப்பு டிசம்பர் 2023 மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் நவீன IFHRMS இணையதளத்தை 2024 புத்தாண்டில் இருந்து பயன்படுத்தலாம்.  நவீன மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையதளம் ஆனது  சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செயல்பாடுகளை மிகவும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply