Ilaiyaraaja Daughter Bhavatharini Death : பவதாரிணி என்னும் பவர் ஸ்டார் மறைந்தது

Ilaiyaraaja Daughter Bhavatharini Death - பிரபல பின்னணிப்பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அகால மரணம் :

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணியின் மரணம் ஆனது தமிழ்நாட்டை மற்றும் மொத்த திரைப்பட உலகையே உலுக்கி (Ilaiyaraaja Daughter Bhavatharini Death) உள்ளது. பவதாரிணி ஒரு பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி மற்றும் ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளாக 23/07/1976-ல் பிறந்தார். இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் இவருடைய உடன்பிறப்புக்கள் ஆவர். சென்னை ரோசரி மாட்ரிக் பள்ளியிலும் மற்றும் சென்னை ஆதார்சு வித்தியாலயம் என்ற மேல்நிலைப் பள்ளியிலும் பவதாரிணி கல்வி கற்றவர். விளம்பர நிறுவன நிர்வாகி ஆர்.சபரிராஜ் என்பவரை பவதாரிணி திருமணம் புரிந்தார்.

பின்னணிப் பாடகி பவதாரிணி :

பவதாரிணி தனது தந்தை இளையராஜா மற்றும் உடன்பிறப்புக்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பவதாரிணி பாடியுள்ளார். தனது தந்தை இளையராஜா இசையமைத்த ‘ராசய்யா’  படத்தில் ‘மஸ்தானா, மஸ்தானா’ என்ற பாடல் மூலம் திரைப்பட பாடகியாக அறிமுகமானார். அவரின் இனிமையான குரல் காரணமாக அவரது  பல பாடல்கள் பெரிய அளவில் கவனம் பெற்றது. பாரதி படத்தில் அவர் பாடிய ‘மயில்போல’, ராமன் அப்துல்லா படத்தில் அவர் பாடிய ‘என் வீட்டு ஜன்னல்’ மற்றும் அனேகன் படத்தில் அவர் பாடிய ஆத்தாடி ஆத்தாடி என்ற பாடலும் பெரிய அளவில் ஹிட் அடித்த பாடல்கள் ஆகும். அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல், உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா என்பவை இவர் பாடிய குறிப்பிடும்படியான பாடல்கள் ஆகும். பவதாரிணி வித்தியாசமான குரல் வளம் கொண்டவர். சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பவதாரிணி பிரபலமானவர் ஆவார்.

இசையமைப்பாளர் பவதாரிணி :

இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பவதாரிணி பணிபுரிந்துள்ளார். மித்ர் மை பிரண்ட் என்ற  நடிகை ரேவதி இயக்கிய படத்தின் மூலம் பவதாரிணி இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் பவதாரிணி தெலுங்கு பட உலகில் நுழைந்தார். ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் பவதாரிணி இசையமைத்தார். வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு பவதாரிணி நல்ல பெயர் வாங்கினார். 10 படங்களுக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். தனது தந்தை இளையராஜாவின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக தேசிய விருது பெற்றவர்.

பவதாரணி கடுமையான வயிற்று வலி காரணமாக கஷ்டப்பட்டார் :

கடுமையான வயிற்று வலி காரணமாக கஷ்டப்பட்ட பவதாரணி கடந்த சில வருடங்களாக பாடாமல் இருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக நினைத்து அவருக்கு தொடக்கத்தில் சிகிச்சை அளித்துள்ளனர். அதன்படியே அவருக்கு  பித்தப்பையில் கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கும் போதுதான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரின் கல்லீரல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் போது கல்லீரல் புற்றுநோய் 4வது ஸ்டேஜில் இருந்துள்ளது. பொதுவாக கல்லீரல் புற்றுநோயை முதல் கட்டத்தில் கண்டுபிடித்தால் மட்டுமே எளிதாக சரி செய்ய முடியும். ஆனால் கல்லீரல் புற்றுநோயை 3ஐ தாண்டி 4வது ஸ்டேஜில் கண்டுபிடித்தால் காப்பாற்றுவது கடினம். 47 வயதாகும் பவதாரணி இந்த பிரச்சனையை சரிசெய்ய இலங்கை சென்று அங்கே  கடினமான ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 25/01/2024 அன்று மாலை 5.20 மணிக்கு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பவதாரிணி சமீபத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் 3 திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் அவரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல் :

முதல்வர் ஸ்டாலின் பவதாரணி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, “பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் வளம் கொண்ட பவதாரிணி பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply