illegal Occupation Of Palestine By Israel : இஸ்ரேலின் சட்டவிரோதமான பாலஸ்தீன ஆக்கிரமிப்பு

சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) இஸ்ரேல் ஆனது பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும் மற்றும் பாலஸ்தீனத்தில் குடியேற்றம் செய்திருப்பதும் சட்டவிரோதமானது (illegal Occupation Of Palestine By Israel) என்பதால் அதனை விரைவில் திரும்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவினை 19.07.2024 அன்று பிறப்பித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நவாஃப் சலாம் 15 நீதிபதிகள் கொண்ட குழு அளித்த ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த தீர்ப்பை வழங்கி உள்ளார். இத்தகைய, சர்வதேச நீதிமன்றத்தின் (International Court Of Justice) தீர்ப்பு காரணமாக, சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்கான ஆதரவு ஆனது பலவீனப்படுத்தப்படலாம்.

illegal Occupation Of Palestine By Israel :

பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆனது சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய குடியேற்றங்களை கட்டியெழுப்புதல் மற்றும் விரிவுபடுத்துதல், அப்பகுதியின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல், நிலங்களை இணைத்தல், நிரந்தரக் கட்டுப்பாட்டை விதித்தல் என்று இஸ்ரேல் படைகள் ஆனது ஆக்கிரமிப்பு செய்துள்ளது மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகள் ஆனது  பரப்பப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது, சுமார் 80% பாலஸ்தீன மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. இஸ்ரேல் படைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu வெளியிட்டுள்ள அறிக்கை :

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) சர்வதேச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை மறுக்கும் விதத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். நெதன்யாகு அந்த அறிக்கையில், “இஸ்ரேலிய மக்கள் தங்கள் சொந்த நிலத்தினை திரும்ப பெற்றுள்ளார்களே தவிர ஆக்கிரமிக்கவில்லை. இஸ்ரேலிய மக்கள் ஆக்கிரமிப்பவர்கள் அல்ல. எங்களது நித்திய தலைநகரான ஜெருசலேமிலிலோ, யூதேயாவிலோ மற்றும் சமாரியாவில் உள்ள எங்களுடைய முன்னோர்களின் நிலத்திலும் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, உரிமையாளர்கள் தான்” என்று கூறியுள்ளார்.

பல இஸ்ரேலிய அரசுப் பேரவையின் அமைச்சர்கள் மற்றும் குடியேறிய தலைவர்கள் இதைப்போலவே நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும், சிலர் இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதத்தில் இதற்கு பதிலடியாக மேற்கு கரையை உடனடியாக முறையாக இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இஸ்ரேல் ஆனது ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க திட்டமிட்டிருந்தது. ஆனால், இஸ்ரேல் ஆனது போர் தொடங்கி 8 மாதங்கள் ஆன பின்பும் அதன் இலக்கை எட்ட முடியாமல் திணறி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply