Immunity To Stay Healthy Foods : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது உடலுக்கு ஊட்டமளிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதனால் தான் பலர் குளிர்காலத்தில் சூப் மற்றும் சூடான உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளையும் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். அந்த வகையில் தற்போது இருக்கக்கூடிய குளிர்காலத்தில் எந்தெந்த வகையான உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து (Immunity To Stay Healthy Foods) நோய்களில் இருந்து காக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள் (Immunity To Stay Healthy Foods)

வைட்டமின் B12 உணவுகள்

வைட்டமின் B12 ஆனது நமது செல்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இறைச்சி, மீன், பருப்பு வகைகள், பீன்ஸ், சீஸ், மோர் போன்ற வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் (Immunity To Stay Healthy Foods) சேர்த்துக்கொள்ள வேண்டும். இது பெரும்பாலான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

உலர் பழங்கள்

 பாதாம், பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை, போன்ற உணவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் உடல் காய்ச்சலில் இருந்து விலகி இருக்க உதவுகிறது.

வைட்டமின் D உணவுகள்

குளிர்காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. எனவே உங்கள் உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளான முட்டை, பால், மீன், கோழி மற்றும் ஆரஞ்சு சாறு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் (Immunity To Stay Healthy Foods) வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்க முடியும். குறிப்பாக குளிர்காலத்தில் மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம் போன்ற மசாலாப் பொருட்களுடன் உணவுகளை சமைத்து உண்பது செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எலும்பு சூப்

இந்த குளிர்காலத்தில் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் எலும்பு பாகங்களை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம். இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது.

நெய்

நெய்யில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான (Immunity To Stay Healthy Foods) கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை மூட்டுகளில் உராய்வு மற்றும் வீக்கத்தைப் போக்கவும் உதவுகின்றன.

Latest Slideshows

Leave a Reply