IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி

2025 இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியை வென்று (IMS India Masters Team Champion) கோப்பையை கைப்பற்றியுள்ளது. இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் அடங்கிய ஆறு அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரின் இறுதி போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியும் தகுதி பெற்றன.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டி

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் பிரையன் லாரா துவக்க வீரராக களமிறங்கி வெறும் 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். பிறகு களமிறங்கிய டுவைன் ஸ்மித் 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிறகு அபாரமாக ஆடிய லென்டில் சிம்மன்ஸ் 41 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் (IMS India Masters Team Champion) முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இந்தியா மாஸ்டர்ஸ் அணியின் வினய்குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் இரண்டு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு 149 ரன்கள் இலக்கு

IMS India Masters Team Champion - Platform Tamil

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக அம்பத்தி ராயுடு மற்றும் சச்சின் டெண்டுல்கர் (IMS India Masters Team Champion) களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 18 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். முறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்பத்தி ராயுடு 50 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் சேர்த்து 15-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா மாஸ்டர்ஸ் அணி எளிதில் வெற்றியை நெருங்கியது.

இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி (IMS India Masters Team Champion)

பிறகு களமிறங்கிய இந்திய அணியின் டி20 நாயகன் யுவராஜ் சிங் 11 பந்துகளில் 13 ரன்களும், ஸ்டுவர்ட் பின்னி 9 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களும் எடுத்ததால் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் (IMS India Masters Team Champion) வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை வென்றது. மேலும் சச்சின் டெண்டுல்கரின் பழைய ஆட்டத்தை மீண்டும் காணவந்த ரசிகர்கள் இந்தியா மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Latest Slideshows

Leave a Reply