Income Tax Refund : வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தால் ரீஃபண்டு இனி ஒரே நாளில் கிடைக்கும்

ஆண்டுதோறும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணையதளத்தை மேம்படுத்தி வருகின்றது. தற்போது எடுத்துள்ள முயற்சியும் பாராட்டப்பட வேண்டிய நல்ல ஒரு தொடக்கமாகும். ஒரு வருடத்தில் ஒரு தனிநபர் அதிகப்படியான வரி செலுத்தப்பட்டதாக ரிட்டர்ன் காட்டினால், அந்த தனிநபர் வருமான வரித்துறையிடமிருந்து வருமான வரி திரும்பப் பெற (Income Tax Refund) தகுதியுடையவர் ஆவார்.

Income Tax Refund : வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்கள் மற்றும் சில நேரங்களில் 5 மாதம் வரையிலும் கால தாமதம் ஏற்படுவதுண்டு. இனிமேல் வருமான வரி தாக்கல் செய்த பின்பு ரீஃபண்டிற்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் சிக்கலான செயலாகவே கருதப்படும் வருமான வரிதாக்கல் செய்யும் செயல்முறையை சீராகவும் எளிதாகவும் செய்ய வருமான வரித்துறை ஆனது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2024-ஆம் ஆண்டு முதல் ஒரே நாளில் வரி செலுத்துபவரின் கணக்கில் பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

Income Tax Refund - வருமான வரி ரீஃபண்டிற்கான கால தாமதம் ஏற்பட முக்கிய காரணம் :

ஒரு வருடத்தில் ஒரு தனிநபர் அதிகப்படியான வரி செலுத்தப்பட்டதாக ரிட்டர்ன் காட்டினால், அந்த தனிநபர் வருமான வரித் துறையிடமிருந்து வருமான வரி திரும்பப் பெற தகுதியுடையவர் ஆவார். வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணைய தளத்தை  (E-filing Portal) TCS நிறுவனமும், வரி செலுத்த உதவும் இணையதளத்தை (Centalized Processing Centre) Infosys நிறுவனமும் தனித்தனியே நிர்வகிப்பதே கால தாமதம் ஏற்பட காரணம் ஆகும். வேறு வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதே முக்கிய காரணம் ஆகும். கால தாமதம் மற்றும் உபரி வரிக்கான கூடுதல் வட்டியை மத்திய வருமான வரி ஆணையம் இழக்கிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனமே இனிமேல் வரி தாக்கல் செய்யும் இணையதளத்தையும் வரி செலுத்தும் இணையதளத்தையும் நிர்வகிக்கப்போகிறது. அதனால் இனிமேல் தங்களின் உபரி வரியை தனிநபர் பிரிவினரும், மாதச் சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே பெற்றுக்கொள்ள (Income Tax Refund) முடியும். கடந்த  புதன்கிழமையன்று மத்திய அமைச்சரவை  இதற்கான ஒப்புதலை இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. தாக்கல் செய்த மறுநாளே தனிநபர் கணக்கிற்கு வந்துவிடும் வகையில் புதிய மென்பொருள் சுமார் 4,241 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்போசிஸ் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது :

பல்வேறு நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தையும் (ITR Portal) வரி செலுத்தும் இணையதளத்தையும் (CPC) மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு விண்ணப்பித்து இருந்தன. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனமே குறைந்த தொகைக்கு விண்ணப்பித்து இருந்ததால், இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. வருமான வரி இணையதளத்தை மேம்படுத்த இன்ஃபோசிஸ் நிறுவனம் சுமார் 18 மாத காலம் எடுத்துக்கொள்ளும் என்றும் மத்திய அமைச்சர் கோயல் தெரிவித்துள்ளார்.

புதிய இணையதளம் திட்டப்பணிகள் குறித்த கருத்துக்கள் :

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முயற்சியால் வருமான வரி செலுத்துவோர், வரி செலுத்துவதற்கும், உபரி வரியை திரும்ப பெறுவதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. கால விரயமும் பண விரயமும் முற்றிலும் தவிர்க்கப்படும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் இது” என்றார்.

Latest Slideshows

Leave a Reply