Income Tax Return Form 2024 : புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வரப்போகிறது

Income Tax Return Form 2024 - ITR-ரில் மத்திய அரசு புதிய அப்டேட் :

புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் (Income Tax Return Form 2024) வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வரப்போகிறது. வருமான வரி ரிட்டர்ன் தொடர்பான படிவங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டன. இந்த 2023 ஆம்  ஆண்டு வழக்கத்தை விடவும் முன்னதாக படிவங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நம்முடைய வருமானம் பற்றிய விவரங்களை மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்வதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் படிவம் ஆனது வருமான வரி ரிட்டர்ன் (ITR) படிவம் ஆகும். இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி, வருமானம் 5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் ஒவ்வொரு தனிநபரும் மற்றும் வணிகரும் வருமான வரி ரிட்டர்ன் (IT ரிட்டர்ன்) அவசியம் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி ரிட்டர்ன் (IT ரிட்டர்ன்)  தாக்கல் செய்வதன் மூலம் வருமானம், வரிப் பொறுப்பு மற்றும் வரி விலக்கு கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் அதற்கு நிவாரணமும் பெற முடியும். கட்டாயமாக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs), சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சம்பளம் வாங்கும் நபர்கள் வருமான வரிக் கணக்கை அரசு அறிவிக்கும நாட்களுக்குள் தாக்கல்  செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படுவது நடைமுறையாக உள்ளது.

இந்தியாவில் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்படி, தனிநபர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய பயன்படுத்த வேண்டிய ITR படிவங்கள் :

மத்திய அரசு புதிய அப்டேட் மூலம் (Income Tax Return Form 2024) இந்த படிவத்தில் என்ன மாற்றங்கள் வந்துள்ளது என்பதை பார்ப்போம்.  மத்திய நேரடி வரிகள் வாரியம் ITR 1 (SAHAJ) மற்றும் ITR 4 (SUGAM) ஆகிய இரு புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை வெளியிட்டிருக்கிறது.

ITR 1 அல்லது சஹாஜ்  : ITR 1 படிவம் ஆனது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கானது ஆகும். ஊதியம், வட்டி வருவாய், வேளாண் துறை மூலமாக வருவாய் பெறுபவர்கள் இந்த ITR 1 படிவ பிரிவில் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ஆனது சம்பளத்தில்/ஓய்வூதித்தில் மற்றும் 1 வீட்டுச் சொத்தில் ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக பெறும் தனிநபர்கள் இதைப் பயன்படுத்த வேண்டும்.

ITR-2 : இது சொத்துக்கள் அல்லது சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் சம்பாதித்த தனிநபர்களால் பயன்படுத்தப்பட வேண்டிய ITR படிவம் ஆகும். இந்த ITR படிவத்தை நம் நாட்டை தவிர மற்ற நாடுகளில் பணம் சம்பாதிப்பவர்களும் பயன்படுத்த வேண்டும். பொதுவாக இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி தனிநபர்கள் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUF) தங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.

ITR 2A : இது 2015-16 வரி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் ஆகும்.  இந்தப் படிவத்தை இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) அல்லது தனிப்பட்ட வரி செலுத்துவோர் பயன்படுத்த வேண்டும்.

ITR-3 : இந்த ITR-3 படிவம் ஆனது ஒரு தனிப்பட்ட வரி செலுத்துவோர் அல்லது ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் ஆனால் நிறுவனம் வழியாக எந்த வணிகத்தையும் நடத்தாத ஒரு இந்து பிரிக்கப்படாத குடும்பம் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து பணம் சம்பாதிக்காதவர்களுக்கு உதவும்.

ITR-4 : இந்த ITR-4 படிவம் ஆனது ITR-4 படிவம் ஆனது சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் பயன்படுத்தப்பட வேண்டிய ITR படிவம் ஆகும். இந்த ITR-4 படிவம் ஆனது வருமானக் கட்டுப்பாடு இல்லாமல், அனைத்து வகையான வணிகங்கள், நிறுவனங்கள் அல்லது தொழில்களுக்கு ஏற்றதாக இருக்கும். ITR 4 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை தொழில் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கானது. இனி இந்தப் புதிய ITR 4 படிவங்களில், வரிதாரர்கள் தங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பண ரசீது விவரங்களையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். குறிப்பாக, முந்தைய 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த வங்கிக் கணக்குகள், அவை எந்த வகை கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை வரிதாரர்கள் கட்டாயமாக  தெரிவித்தாக வேண்டும்.

ITR-4S : எந்தவொரு நபரும் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பமும் (HUF) இந்த ITR-4S படிவத்தை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படுத்த வேண்டும்.

ITR-5 : நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்கள், தனிநபர்களின் அமைப்பு ஆகியவற்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இந்த ITR-5 படிவத்தை பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டும்.

ITR 6 : இந்த ITR 6 படிவத்தை பிரிவு 11 இன் கீழ் வரி விலக்கு கோரும் நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களைத் தவிர, அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்த வேண்டும். மதம் அல்லது தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சொத்திலிருந்து பிரிவு 11 இன் கீழ் வரி விலக்குகளை கோரக்கூடிய நிறுவனங்கள் வருமானம் பெறுகின்றன. இந்த குறிப்பிட்ட இந்த ITR  6 படிவத்தை ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய இயலும்.

ITR 7 : இந்த ITR 7 படிவத்தை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், மதம் அல்லது தொண்டு அறக்கட்டளைகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றில் விலக்கு கோரும் நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். தற்போது உள்ள நடைமுறை இதுவாகும். இந்த 2023ஆம் ஆண்டு வழக்கத்தை விட முன்னதாக படிவங்கள் வெளியிடப்பட்டிருப்பது, வரிதாரர்களுக்கு சீக்கிரமே படிவங்களை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Latest Slideshows

Leave a Reply