Increasing AI Growth : வியத்தகு AI பயன்பாடு வளர்ச்சி - TEAMLEASE DIGITAL Report

கடந்த 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு துறைகளில் 48% அளவிற்கு AI பயன்பாடு (Increasing AI Growth) ஆனது அதிகரித்துள்ளது. அதாவது IT மற்றும் Technology நிறுவனங்களுக்கு அப்பாலும், AI பயன்பாடு ஆனது அதிகரித்துள்ளது. வரும் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் 75% அளவிற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. AI பல்வேறு துறைகளை ஆக்கிரமித்து வருகிறது.

Increasing AI Growth :

அனைத்து துறைகளிலும் மற்றும் சகல வயதினர்கள் மத்தியிலும் இனி AI பயன்பாடு அதிகரிக்கும் (Increasing AI Growth) என கணித்துள்ளனர்.

  • அறிவு சார்ந்த பணியில் உள்ளவர்கள் மத்தியில், குறிப்பாக ‘Generation Z’ எனப்படும் 18-28 வயதுடைய பயனர்களில் 85% AI பயன்பாடு அதிகப்படியாக உள்ளது.
  • மில்லியனியல்கள் எனப்படும் 29-43 வயதுடையோர் மத்தியில் 78% AI பயன்பாடு உள்ளது.
  • ‘Generation X’ எனப்படும் 44-57 வயதுடையோர் மத்தியில் 76% AI பயன்பாடு உள்ளது.
  • கடந்த 6 மாதங்களில் மட்டும் செயற்கை நுண்ணறிவு பயனர்களின் எண்ணிக்கை ஆனது இரு மடங்காக உயர்ந்துள்ளது.

தற்போது நாளிதழில்களில் AI பற்றிய செய்திகள் தொடர்ந்து இடம்பெறுகிறது :

TEAMLEASE DIGITAL ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் வங்கி, நிதிநிறுவனங்கள், பார்மா, ஹெல்த்கேர், நுகர்பொருள், சில்லறை வணிகம், உற்பத்தி, உட்கட்டமைப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் எந்த அளவிற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளது. பெருநிறுவனங்கள் AI-வின் முக்கியத்துவத்தை உணர்ந்த அளவுக்கு, அதற்கடுத்த நிலையில் உள்ள நிறுவனங்கள் இன்னமும் உணரவில்லை.

AI பயனர்கள் திறனைப் பற்றி :

  • 90% AI பயனர்கள் இது நேரத்தை சேமிக்க பெருமளவு உதவுகிறது.
  • 85% தங்களின் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது.
  • 79% பேர் போட்டித்தன்மைக்கு AI பயன்பாடு தவிர்க்க முடியாதது
  • ஒவ்வொரு ஆண்டும் AI இன் சந்தை 20% அல்லது அதற்கு மேல் வளர்கிறது.
  • அனைத்து துறையினர் மற்றும் சகல வயதினர் மத்தியிலும் AI பயன்பாடு அதிகரிக்கிறது.
  • தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் 35% வணிகங்கள் AI-ஐப் பயன்படுத்துகின்றன.
  • உயர்கல்வி பயில்வோர் மத்தியில் AI பயன்பாடு என்பது தவிர்க்க இயலாத அம்சமாகி வருகிறது.
  • பலர் செய்யும் வேலையை AI தொழில்நுட்பத்தில் எளிதாக செய்துவிடமுடிகிறது.

என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் சுமார் 50,000 கோடி ரூபாயாக இருந்த செயற்கை நுண்ணறிவு சந்தை ஆனது வரும் 2028 ஆம் ஆண்டில் 1,67,000 கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் அதன் கண்டுபிடிப்புகளுக்கு தடைபோடுவது இயலாதது என்பதால், நம் வாழ்வாதாரத்தை திறம்பட நடத்த மாறிவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய அவசியமாகிறது.

Latest Slideshows

Leave a Reply