Increasing Link Roads In Chennai : சென்னையில் அதிகரித்து வரும் Traffic Problem

சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஆனது அதிகரித்து வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் ஆனது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சென்னையில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆனது சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதால் சம்பத்தப்பட்ட பகுதிகளில் பீக் ஹவர்களில் (Peak Hours) கடும் போக்குவரத்து நெரிசல் ஆனது ஏற்படுகிறது. இதன் காரணமாக சென்னை மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விவரங்கள் :

  • ஊதா வழித்தடம் – மாதவரம் பால் பண்ணையில் இருந்து சிறுசேரியில் உள்ள சிப்காட் வரை.
  • காவி வழித்தடம் – பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் கலங்கரை விளக்கம் வரை.
  • சிவப்பு வழித்தடம் – மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை.

ஆகியவை முக்கியமான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆகும். இவை தவிர அண்ணா சாலை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பணிகளும் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Increasing Link Roads In Chennai - சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகின்ற 2 இணைப்பு சாலைகளின் விவரங்கள் :

● பிள்ளையார் கோவில் தெருவில் தொடங்கி பாடிகுப்பம் மெயின் ரோடு வரை :

பிள்ளையார் கோவில் தெரு முதல் பாடிகுப்பம் மெயின் ரோடு வரை 900 மீட்டர் இணைப்பு சாலை (Increasing Link Roads In Chennai) ஆனது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை ஆனது பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக ஜவஹர்லால் நேரு சாலை நோக்கி பயணம் செய்கின்ற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பூந்தமல்லி ஹை ரோட்டிற்கு ரயில் நகர் பாலம் வழியாக செல்ல வசதியாக இருக்கும்.

● டிஜிஎஸ் தினகரன் சாலையில் தொடங்கி துர்காபாய் தேஷ்முக் ரோடு வரை :

இந்த டிஜிஎஸ் தினகரன் சாலையில் இருந்து துர்காபாய் தேஷ்முக் ரோடு வரை செல்லும் இணைப்பு சாலை (Increasing Link Roads In Chennai) ஆனது மயிலாப்பூர், கிரீன்வேஸ் ரோடு, சாந்தோம் வழியாக அடையாறு மற்றும் கிண்டி செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு திட்டங்களையும் 37.8 கோடி ரூபாய் செலவில் செய்து முடிக்க 12 மாதங்கள் காலக்கெடு ஆனது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● கத்திப்பாரா மேம்பாலம் ரூட் :

குறிப்பாக கத்திப்பாரா செல்வோருக்கு முக்கியமான வழிகாட்டுதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கத்திப்பாரா நோக்கி செல்வோர் ஏடிபி சிக்னலை தாண்டியதும் இடதுபுறம் திரும்பி கன்டோன்மென்ட் ரோடு வழியாக பயணித்து தனகோட்டி ராஜா தெரு, சிட்கோ தொழிற்பேட்டை தெற்கு பேஸ் ரோடு ஆகியவற்றின் வழியாக GST ரோட்டை அடைய முடியும். இங்கிருந்து மக்கள் ஒலிம்பியா ஜங்ஷனை கடந்து சென்று கத்திப்பாரா மேம்பாலத்தை எளிதாக அடையலாம். சென்னை ட்ராபிக் பிரச்சனை மற்றும் நெரிசலை இணைப்பு சாலைகள் (Increasing Link Roads In Chennai) வெகுவாக குறைக்கும்.

Latest Slideshows

Leave a Reply