IND vs AFG T20 : உலக கோப்பைக்கு முன்னதாக கடைசி T20 தொடர்

மும்பை :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் (IND vs AFG T20) இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்த தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஏனெனில் இதன் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வரை எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களை டி20 உலக கோப்பை அணியில் சேர்க்க தேர்வுக்குழு பரிசீலிக்கும்.

எனவே இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தேர்வுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தற்போது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நோக்கிச் செல்கின்றனர். இந்திய அணி தற்போது அங்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு அணியை தயார்படுத்த தேர்வாளர்கள் நேரடியாக உள்ளனர்.

IND vs AFG T20 :

ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் (IND vs AFG T20) விளையாட விராட் கோலியும், ரோகித் சர்மாவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். ரோகித் சர்மா, கோலி அணிக்கு திரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே வீரர் ருத்ராஜுக்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. அதேபோல் ஜெய்ஸ்வால், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இஷான் கிஷன் மீண்டும் விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.

அதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடலாம். அர்தீப் சிங், முகேஷ் குமார் தீபக் சாகர், அவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாட வாய்ப்புள்ளது. மேலும் சஞ்சு சாம்சன் வழக்கம் போல் டி20 அணியில் இடம்பெறமாட்டார் என தெரிகிறது. இந்த அணியில் சில மாற்றங்களுடன் தேர்வுக் குழு இறுதி அணியை அறிவிக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply