IND Vs AUS 2nd Test Series : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி

5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் கோட்டை என கருதப்படும் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது டெஸ்ட் போட்டி

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியானது அடிலெய்ட் (IND Vs AUS 2nd Test Series) மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (6.12.2024) அன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸில் வெற்றிபெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மேலும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், படிக்கல், துருவ் ஜூரெல் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ரவிச்சந்திர அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.

முதல் நாள் ஆட்டம்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஜெய்ஸ்வால் (IND Vs AUS 2nd Test Series) அவுட் ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய சுப்மன் கில் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி சிறிது நேரம் ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளித்து வந்த நிலையில் 37 ரன் எடுத்தபோது ராகுல் வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா 3 ரன்னிலும், ரிஷப் பண்ட் 21 ரன்னிலும், சிறப்பாக விளையாடி வந்த நித்திஷ் ரெட்டி 42 ரன்னிலும் வெளியேறியதால் இந்திய அணி 44.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா அணி ரன்கள் குவிப்பு

இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. ஆஸ்திரேலியா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லாபுசாக்னே 64 ரன்கள் எடுத்த நிலையில் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஸ்மித் 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் (IND Vs AUS 2nd Test Series) இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து 140 ரன்களுடன் பெவிலியன் திரும்பியதால் ஆஸ்திரேலியா 87.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா அபார வெற்றி (IND Vs AUS 2nd Test Series)

இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வந்தது. இதில் 2-ம் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 24 ரன்னும், ரிஷப் பண்ட் 28 ரன்னும், நித்திஷ் ரெட்டி 15 ரன்னும் எடுத்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 2-வது இன்னிங்ஸில் 175 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா அணியை விட வெறும் 18 ரன்களுடன் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி (IND Vs AUS 2nd Test Series) அபார வெற்றி பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply