IND Vs AUS Test Series : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி (IND Vs AUS Test Series) அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நவம்பர் 22-ம் தேதி தொடங்கியது.

இந்தியா பேட்டிங்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலியும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பிறகு களத்தில் இருந்த நிதிஷ் ரெட்டி மற்றும் பண்ட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் பண்ட் 37 ரன்னில் அவுட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் (IND Vs AUS Test Series) வெளியேறினர். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா 104 ரன்னில் ஆல் அவுட்

இதன் பிறகு ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 8 ரன்னிலும், நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்னிலும் வெளியேறினர். பிறகு களமிறங்கிய ஸ்மித் ரன் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா அணி 51.2 ஓவரின் முடிவில் (IND Vs AUS Test Series) 104 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2-வது இன்னிங்ஸ் (IND Vs AUS Test Series)

இதனை தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் 2-வது இன்னிங்ஸில் (IND Vs AUS Test Series) நிதானமாக விளையாடி வந்த கே.எல் ராகுலும், ஜெய்ஸ்வாலும் அரை சதத்தை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடி 273 ரன்கள் எடுத்தபோது 77 ரன்னுக்கு கே.எல் ராகுல் வெளியேறினார். இதனை தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 161 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 476 ரன்களுக்கு இந்தியா டிக்ளெர் செய்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு 534 ரன்கள் இலக்கு

இந்தியா முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த 46 ரன்னும், 2-வது இன்னிங்ஸில் எடுத்த 476 ரன்களையும் சேர்த்து ஆஸ்திரேலியா அணிக்கு 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆஸ்திரேலியா அணியில் சற்று நிதானமாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 89 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு சிறிது நேரம் தாக்குபிடித்த மீட்செல் மார்ஷ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 238 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 295 ரன்கள் (IND Vs AUS Test Series) வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply