IND vs BAN Test Series : முதல் டெஸ்ட் தொடரில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் (IND vs BAN Test Series) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். கேப்டன் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி மட்டும் அடித்து வெறும் 6 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில்லும் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

இந்திய முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தது :

அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களை குவித்தது. இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் ஹாசன் மஹ்முத் 5 விக்கெட்களை வீழ்த்தினார். பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி மளமளவென அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் சார்பாக பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். 2வது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 287 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில் அதிகபட்சமாக 119 ரன்களும், ரிஷப் பண்ட 109 ரன்களும் எடுத்தனர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு :

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து வந்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்மூல் ஹூசைன் சாண்டோ அதிகபட்சமாக 82 ரன்களை எடுத்திருந்தார்.

IND vs BAN Test Series - இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி :

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் வங்கதேச அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அஸ்வின் புதிய சாதனை :

ஒரு போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை இரண்டு முறை வீழ்த்திய ஒரே வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை ரவிச்சந்திர அஸ்வின் படைத்துள்ளார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இப்படி ஒரு ரெக்கார்டை இதுவரைக்கும் யாருமே செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply