IND Vs PAK Asia Cup Cricket Match : உலகக் கோப்பை IND Vs PAK | பிரபலங்கள் பங்கேற்பு

IND Vs PAK Asia Cup Cricket Match : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

IND Vs PAK Asia Cup Cricket Match :

கிரிக்கெட் உலகக் கோப்பையின் 13வது பதிப்பு இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் பிரமாண்டமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் அடுத்த போட்டியை விளையாடும் இந்திய அணி, அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் பிசிசிஐ மற்றும் ஐசிசி சார்பில் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழா கூட இல்லாமல் தொடங்கியுள்ள நிலையில், கலை நிகழ்ச்சிகளுடன் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான ஏற்பாடுகள் (IND Vs PAK Asia Cup Cricket Match) மும்முரமாக தயாராகி வருகின்றன. 1.32 லட்சம் ரசிகர்கள் பார்க்கும் போட்டியின் தொடக்க விழாவில் பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் பாடவுள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டியை காண இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை லீக் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் பார்வையிடுவார். அவருடன் பாகிஸ்தானில் இருந்து 60 பத்திரிகையாளர்களும் இந்தியா வர இருக்கின்றனர்.

IND Vs PAK Asia Cup Cricket Match : 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பதால் இந்த போட்டியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை வரலாற்றை இந்தியா தொடருமா? இல்லை இந்தியாவுக்கு எதிரான மோசமான வரலாற்றை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வருமா? என்பது அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தெரியும். இம்முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் லீக் ஆட்டங்களில் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply