IND vs PAK Match Cancelled : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்து

IND vs PAK Match Cancelled : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டுள்ளது.

IND vs PAK Match Cancelled - ஆசியக் கோப்பை தொடர் :

ஆசியக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபால் அணியை வீழ்த்தியது. அடுத்ததாக இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை அணி வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தியது. இதனை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி இலங்கையில் நேற்று தொடங்கியது. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் ஆடியது. இதனால் முதலில் களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதன் காரணமாக இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இஷான் கிஷன்-ஹர்திக் பாண்டியா இணைத்து இந்திய அணிக்கு புத்துயிர் அளித்தது. இருவரும் சிறப்பாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷான் 81 பந்துகளில் 82 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ஓட்டங்களையும் பெற்றனர்.

இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஷகின் அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து மழை பெய்ததால், இரவு 9 மணிக்கு நடுவர்களிடம் சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 9 மணிக்கு ஆட்டம் தொடங்கினால், TLS விதிகளின்படி இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 40 ஓவர்களில் 239 ரன்களும், 30 ஓவர்களில் 203 ரன்களும், 20 ஓவர்களில் 155 ரன்களும் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மழை நிற்கவில்லை.

IND vs PAK Match Cancelled : நடுவர்கள் இறுதியாக 9.50 மணிக்கு இரு அணிகளின் கேப்டன்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி முழுமையாக நடைபெறாததால் (IND vs PAK Match Cancelled) ரசிகர்கள் பலர் சோகத்தில் உள்ளனர். பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. இதன் போது பலக்கலே மைதானத்தில் நடைபெற்ற 33 போட்டிகளில் 4 போட்டிகள் மாத்திரமே நிறைவடைந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்த பிசிசிஐ, ஆசிய கோப்பையை இலங்கையில் நடத்த வலியுறுத்தியுள்ளது. இந்த போட்டி தவிர நாளை நேபாள அணியுடன் இந்திய அணி விளையாடும் போட்டிக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மூன்று புள்ளிகளுடன் பாகிஸ்தான் தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு தற்போது ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனி இந்தியா எந்த வழியில் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்லும் என்று பார்ப்போம்.

இந்தியா திங்கட்கிழமை நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் அதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். நேபாளத்துக்கு எதிரான போட்டி என்பதால் இந்தியாவுக்கு 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திங்கள்கிழமை மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அன்றைய நாள் ஆட்டமும் மழையால் நிறுத்தப்பட்டால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஆட்டம் இடைநிறுத்தப்பட்டால் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு புள்ளி கிடைக்கும்.

இதன் மூலம் இந்தியா சூப்பர் ஃபோர் சுற்றுக்கு எளிதாக முன்னேறும். ஒருவேளை மழை காரணமாக டக்வொர்த்தின் விதிப்படி விளையாடி முடிவு நேபாள அணிக்கு சாதகமாக மாறினால் நேபாள அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்லும்.

Latest Slideshows

Leave a Reply