IND vs PAK SAFF Championship 2023: சுனில் செத்ரி அபாரம்… பாகிஸ்தானை ஊதி தள்ளியது இந்தியா..!
IND vs PAK SAFF Championship 2023 தொடரில் இந்திய கால்பந்து அணி பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சுனில் சேத்ரியின் மூன்று கோல்களால் சிறந்த தொடக்கத்தை பெற்றது. சேத்ரியின் இரண்டு கோல்கள் பெனால்டி இடத்திலிருந்து வந்தன, அதே நேரத்தில் அவர் தனது முதல் கோல் அடிக்க பாகிஸ்தான் கீப்பர் சாகிப் ஹனிஃப் செய்த தவறைப் பயன்படுத்திக் கொண்டார்.
14வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. பெங்களூருவில் இன்று தொடங்கிய தொடர் ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், குவைத், வங்கதேசம், மாலத்தீவு, லெபனான், பூடான் ஆகிய 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டுக்காக மட்டும் இந்தியா வரவில்லை. இரண்டுக்கும் அனுமதி இல்லை. ஆனால், கிரிக்கெட் தவிர, ஹாக்கி, கால்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளையும் பாகிஸ்தான் இங்கு விளையாடுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.
பெங்களூருவில் நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு 5 மணி நேரத்துக்கு முன்புதான் பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இந்த போட்டியை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த இந்திய வீரர் சுனில், 16வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சுனில் கோலாக மாற்றினார்.
அதேபோல் ஆட்டத்தின் 2-வது பாதியில் 74-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இது சுனில் சேடியின் 90வது சர்வதேச கோல் ஆகும். அதேபோல் இந்திய வீரர் உதாந்தா ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, இறுதியில் இந்திய அணி 4க்கு 0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.