IND vs PAK SAFF Championship 2023: இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களிடையே பயங்கர மோதல்..
IND vs PAK SAFF Championship 2023 போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூருவில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன் மூலம் இந்தியா நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த பரபரப்பான போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 44வது நிமிடத்தில் மைதானத்திற்கு வெளியே சென்ற பந்தை பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பால் எடுத்து வீச முயன்றார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமாக் பாகிஸ்தான் வீரரிடம் இருந்து பந்தை பறித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமாக்கின் இந்த செயலை கண்டித்து பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை சூழ்ந்து கொண்டு ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டனர்.இதனை அடுத்து இரு அணி பயிற்சியாளர்களும் மோதலை நிறுத்தி வீரர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் பாகிஸ்தான் வீரர் விதிகளுக்கு மாறாக பந்து வீச முயன்றதால் இதை தடுத்ததாக இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமார்க் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு வீரர்களையும் சமாதானப்படுத்த நடுவர்கள் கடுமையாகப் போராடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்திய பயிற்சியாளர் ஸ்டிமாக்கிற்கு நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இதையே பாகிஸ்தான் பயிற்சியாளரிடமும் நடுவர் காட்டினார். ஆனால் எந்த ஒரு வீரருக்கும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கால்பந்தில் இரு அணிகள் மோதுவது சகஜம். அதுவும் கால்பந்தாட்ட மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டு ஒருவரையொருவர் தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர் உடான்டா ஆட்டத்தின் 81 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இறுதியில் இந்திய அணி நான்கிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. இடையில் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.