Ind vs SA 1st Test : 93 ரன்னில் சுருண்ட இந்தியா.. சொந்த மண்ணில் படுதோல்வி!
தென்னாப்பிரிக்கா அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் (Ind vs SA 1st Test) கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் படுதோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் இந்திய அணியை 15 வருடத்திற்கு பின் வீழ்த்தியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆனது இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 14.11.2025 அன்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்கு முன்னதாக 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி தோல்வி (Ind vs SA 1st Test)
முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து 159 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணி ஆனது 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி வெற்றி பெற 124 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியது. யான்சன் பந்து வீச்சில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமலும் மற்றும் கே.எல். ராகுல் 1 ரன் மட்டுமே எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்காவின் சிறந்த சைமன் ஹார்பர் நான்கு விக்கெட்டுகளும், மற்றும் கேசவ் மகாராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் இந்திய அணி ஆனது 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 15 வருடத்திற்கு பின் தோல்வி அடைந்துள்ளது.
ஹார்மர் ஆட்ட நாயகன் விருது வென்றார்
இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் சிறந்த பந்து வீச்சை செய்து வருகிறார். இவர் இந்த தொடரின் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சிறந்த முறையில் 8 விக்கெட்டை வீழ்த்திய அவரை ஆட்ட நாயகனாக தேர்வு செய்துள்ளனர்.
இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் என்ன?
இந்திய அணி பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் (Ind vs SA 1st Test) சிறப்பாக ஆடி வருவதாகவும், சவாலான மற்றும் கடினமான மைதானங்களில் தொடர்ந்து சொதப்பி வருவதாகவும் கருத்து நிலவுகிறது. மேலும் நிதானமாக ஆடி இருந்தால் சிறந்த ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்கலாம் என்கின்ற கருத்தும் நிலவுகிறது. இந்திய அணி இது போன்ற நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக விளையாட வேண்டும். மேலும் இந்திய அணி ஆனது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணியின் சாதனை
சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான தோல்வியை அடைந்திருப்பது ரசிகர்களை மிகவும் வேதனை அடையவைத்துள்ளது. இந்திய மண்ணில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?