IND Vs SA 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி (IND Vs SA 3rd T20) வருகிறது. இதில் டர்பனில் நடைபெற்ற முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2-வது T20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை வீழ்த்தியது.

மூன்றாவது T20 போட்டி (IND Vs SA 3rd T20)

இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும்  மூன்றாவது T20 போட்டியானது தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் (IND Vs SA 3rd T20) நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி இந்திய அணியின் சார்பாக  சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் 2-வது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆன நிலையில் இந்த மூன்றாவது T20 போட்டியிலும் ரன் எடுக்காமல் வெளியேறினார்.       

அடுத்து களமிறங்கிய திலக் வர்மா அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினர். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் அரைசதத்தை கடந்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அதிரடி ஆட்டக்காரர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சிறிது நேரம் நிலைத்து ஆடினார்.

திலக் வர்மா சதம்

நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 56 பந்துகளில் 7 சிக்சர் 8 பவுண்டரியுடன் சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 18 ரன்களுடன் வெளியேறினார். பிறகு களமிறங்கிய ரின்கு சிங் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்த நிலையில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 107 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா 20 ஓவர்கள் (IND Vs SA 3rd T20) முடிவில் 219 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 220 ரன்கள் இலக்கு

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் ஓவருக்கு (IND Vs SA 3rd T20) பிறகு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான ராக்கில்டன் 15 ரன்களுடன் மற்றும் ஹென்ட்ரிக்ஸ் 21 ரன்களுடன் வெளியேறினர். அடுத்து கேப்டன் மார்கன் நிதானமாக விளையாடி 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்றி க்ளாசன் அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயர்த்தினார். இவரின் அதிரடி ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில் ஹென்றி க்ளாசன் 41 ரன்களுடன் வெளியேறினார். கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று (IND Vs SA 3rd T20) 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கான கடைசி T20 போட்டி வரும் நவம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.

Latest Slideshows

Leave a Reply