IND Vs SA 3rd T20I : IND Vs SA 3வது T20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஆனது 3 ஒருநாள் போட்டிகள், 3 T20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.

இந்தியா - தென்னாப்பிரிக்கான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஆனது 1-1 என்ற சமனில் முடிந்தது :

இந்திய மகளிர் அணி ஆனது இதற்கு முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. அதையடுத்து நடைபெற்ற அடுத்து ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய மகளிர் அணி வென்றது. இவற்றை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 T20 போட்டி தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 வது போட்டி ஆனது மழையால் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 வது போட்டி நடைபெற்றது.

இந்த 3 வது போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய மகளிர் அணி ஆனது தென்னாப்பிரிக்க மகளிர் அணியை முதலில் பேட்டிங் (Bating) செய்ய அனுமதித்தது. இதையடுத்து பேட்டிங் (Bating) செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஆனது இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறியது. தென்னாப்பிரிக்க மகளிர் அணியை சேர்ந்த  தாஷ்மின் பிரிட்ஸ் (20), மரிஷானே காப் (10) மற்றும் அனேக் போஷ் (17) ஆகியோர் மட்டுமே இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சை சமாளித்து இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

IND Vs SA 3rd T20I - தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஆனது 17.1 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது :

மற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி வீராங்கனைகள் எல்லாம் ஒற்றை ரன் இலக்கை கூட தாண்ட முடியவில்லை. தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஆனது 17.1 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய மகளிர் அணியில் பூஜா வஸ்டிராகர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களையும் மற்றும் ராதா யாதவ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ராதா யாதவ் 3 ஓவர்கள் வீசியதில் 1 மெய்டன் ஓவரும் மற்றும் வெறும் 6 ரன்களை மட்டுமே வழங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி மிகவும் எளிய இலக்குடன் ஆடியது. இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனாவும் மற்றும் ஷபாலி வர்மாவும் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடினார்கள். இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி (IND Vs SA 3rd T20I) 10.5 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சதமடித்த மந்தனா சாதனை :

ஸ்மிருதி மந்தனா மிகவும் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 8 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடித்து மொத்தம் 54 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா இந்த அரைசதம் அடித்ததின் மூலம் T20 மகளிர் போட்டிகளில் அதிக அரைசதம் (24) அடித்த வீராங்கனைகள் பட்டியலிலும் 3வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீராங்கனை சூசி பேட்ஸ் (29) மற்றும் ஆஸ்திரேலியா வீராங்கனை பேத் மூனி (25) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஸ்மிருதி மந்தனாவுக்குத் துணையாக ஆடிய ஷபாலி வர்மாவும் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்துள்ளார்.  இந்தியா – தென்னாப்பிரிக்கான 3 T20 போட்டிகள் (IND Vs SA 3rd T20I) கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

Latest Slideshows

Leave a Reply