IND vs SA Bowling Pitch : பவுலிங் பிட்சில் முதலில் பேட்டிங் செய்வது நல்லது

IND vs SA Bowling Pitch :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இது இந்தியாவுக்கு பின்னடைவாக இருந்தாலும், வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். செஞ்சூரியனில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது. இதன் மூலம், அதிக ஈரப்பதம் காரணமாக ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த நெருக்கடியான சூழலில் இந்தியா எப்படி முதலில் பேட்டிங் செய்யப்போகிறது என்பதை இப்போது பார்க்கலாம். இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர், இந்த டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் எப்போது இந்தியா இவ்வளவு கடினமான சூழலில் முதலில் பேட் செய்ததோ அப்போதெல்லாம் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பந்துவீசுவதை விட முதலில் பேட்டிங் செய்தால் சிறப்பாக செயல்படுவோம். இது நல்ல விஷயம்தான் என்றார். இதனை தொடர்ந்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறுகையில், கடினமான சூழலில் இந்தியா பேட்டிங் செய்கிறது.

IND vs SA Bowling Pitch : தைரியமாக நின்று பேட்டிங் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த முறை இதுபோன்ற சூழலில்தான் இந்தியா பேட்டிங் செய்தது. அப்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் தவறு செய்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பந்தை அங்கும் இங்கும் மாற்றி போட்டனர். பந்துவீச்சில் அவர்களுக்கு ஒழுக்கம் இல்லை. இங்கும் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்திய வீரர்கள் மோசமான பந்தில் விளையாட வேண்டும். முதலில் தற்காப்புடன் விளையாடுவது நல்லது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply