IND vs SA ODI : இந்திய அணியில் புதிய வீரர் அறிமுகமாக வாய்ப்பு
IND vs SA ODI :
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி (IND vs SA ODI) இன்று கெபர்கா மைதானத்தில் நடக்கிறது. ஐபிஎல் மினி ஏலம் பற்றி உலகமே பேசுகிறது. இதனால் ரசிகர்களின் கவனமெல்லாம் அங்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்று இந்திய அணி தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
IND vs SA ODI - இரண்டாவது போட்டி :
இந்த நிலையில் இரண்டாவது போட்டியிலும் (IND vs SA ODI) வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது. கெபர்கா மைதானம் மிகவும் ஈரமாக உள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 8 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த எட்டு ஒருநாள் போட்டிகளில் எந்த அணியும் 300 ரன்களை எட்டவில்லை. இதனால் இரு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த ஆடுகளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். தொடரை வெல்ல இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் எந்த வீரரும் களமிறங்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஸ்ரேயாஸ் ஒருநாள் அணியில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரஜத் பட்டிதார் அல்லது ரிங்கு சிங் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இன்று களமிறங்க வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். சாம்சனுக்கு மூன்றாவது அல்லது நான்காம் இடத்தில் வாய்ப்பு கிடைத்தால், மிடில் ஆர்டரில் ரிங்கு சிங்கை இந்தியா பயன்படுத்தலாம். ஒருவேளை சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடப் போகிறார் என்றால் இந்திய அணி ரஜத் பட்டிதாருக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கலாம். மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. தொடரை வெல்வதற்கு ஏற்ற மைதானம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?