IND Vs SA T20 Series : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி T20 போட்டியானது ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை (IND Vs SA T20 Series) கைப்பற்றியுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்தியா வெற்றி (IND Vs SA T20 Series) பெற்றது. அடுத்து பெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் T20 தொடரில் சமனில் இருந்தது. இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

4-வது T20 போட்டி

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி T20 போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து பேட்டிங் செய்ய வந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சனுடன் சேர்ந்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.

சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா சாதம்

தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சாளர்களான ஜெரால்டு கோட்ஸீ மற்றும் மார்கோ ஜான்சென் என அனைத்து வீரர்களும் இந்திய அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சோர்ந்து போனார்கள். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 283 ரன்கள் குவித்தது. இதில் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்களுடனும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 284 ரன்கள் இலக்கு

இதன் மூலம் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரயான் ரிக்கெல்டன் மற்றும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர். இதில் முதல் ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது பந்தில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் (IND Vs SA T20 Series) அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான ரயான் ரிக்கெல்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 1 ரன்னுடன் வெளியேறினார்.

இந்தியா தொடரை கைப்பற்றியது (IND Vs SA T20 Series)

இப்படி தென்னாப்பிரிக்கா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் நிதானமாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 36 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 ரன்களுடன் வெளியேறினர். மேலும் 18 ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி (IND Vs SA T20 Series) பெற்று 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply