IND vs SA Women's T20 Cricket Match - இந்திய பெண்கள் அணி தோற்றது

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜூலை 5, 7 மற்றும் 9-ந் தேதிகளில் (IND vs SA Women’s T20 Cricket Match) நடைபெற உள்ளது. பெங்களூரில் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 4 ரன்னிலும், கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

IND vs SA Women's T20 Cricket Match : 05.07.2024-ல் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 20 ஒவர் போட்டி :

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (05.07.2024) நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான இருபது ஒவர் கிரிக்கெட் போட்டி ஆனது விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் சிறந்த பந்து வீச்சை கடைப்பிடிக்காதால் எளிய பல கேட்ச்களைக்கூட இந்திய பெண்கள் அணி தவறவிட்டனர். இந்திய பெண்கள் அணி நாற்பது ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தில் விக்கெட்டுகளை எடுத்தனர். தென்னாப்பிரிக்கா பெண்கள் அணியின் லாரா நல்ல துவக்கத்தை கொடுக்க பிரிட்ஸ்,காப் ஆகிய வீராங்கனைகள் நின்று நிதானமாக ஆடி சிறப்பாக ரன்களை குவித்தனர்.

அதைத்தொடர்ந்து இந்திய பெண்கள் அணி 190 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி விரைவில் அவுட் ஆகியதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆனது வீணானது. துவக்க வீராங்கனை ஷபாலியை தொடர்ந்து களமிறங்கிய ஆட்டக்காரர்கள் நன்றாக அடித்து ஆடியபோதும் ரன்களை குவிக்க முடியவில்லை. அதனால் ஜெமிமா, ஹேமா, கவுர் ஆகியோர் பதினைந்து ஓவருக்கு மேல் அவுட்டானாலும் பரவாயில்லை என்று இறங்கி தீவிரமாக ரன்களை குவிக்க முயன்றனர். இருந்தபோதும் இந்திய பெண்கள் அணி கடைசியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் ஆரம்பத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட மைதானம்,  போட்டி தொடரும் சமயத்தில் ரசிகர்களின் வரவை பெற்று ஒரளவு நிறைந்து காணப்பட்டது. ரசிகர்கள் சிறப்பாக உற்சாகம் தந்தனர். இந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பெண்கள் இருபது ஒவர் கிரிக்கெட் போட்டி ஆனது விறுவிறுப்பிற்கு குறைவின்றி நேற்று (05.07.2024) சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Latest Slideshows

Leave a Reply