Women's T20 Worldcup: IND W vs IRE W 5 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி

மகளிருக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை, இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. மகளிருக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடரானது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து இரு அணிகளும் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹெர்மன்ப்ரித் கவுர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனைகளாக களம் இறங்கிய ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷபாலி வர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 62 ரன்களை எடுத்திருந்தனர். அடுத்தாக வந்த கேப்டன் ஹெர்மன்ப்ரித் கவுர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிகஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கெட்கள் விழுந்தாலும் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 87 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 155 ரன்களை எடுத்து. இதை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியானது களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமி ஹன்டர் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கி விளையாடிய கேபி லீவிஸ் 25 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார்.

அயர்லாந்து அணியானது 8.2 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 54 ரன்களை எடுத்தனர். விளையாடிகொண்டிருந்த போது மழை வந்ததால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 4 தொடர்களை விளையாடிய இந்திய அணி 3 தொடர்களை வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேரியது.

Leave a Reply

Latest Slideshows