India And Sri Lanka Railway Project : இலங்கை-தமிழகம் இடையே தரைவழிப் பாலம்

இலங்கையால் முன்மொழியப்பட்ட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடற்பரப்பிற்கு அடியில் தரைவழிப் பாலம் (ரயில்வே சுரங்கப்பாதை) அமைக்கும் யோசனை (India And Sri Lanka Railway Project) ஆனது இந்திய வணிகத்திற்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் மேம்பாட்டை உருவாக்கும்.

இலங்கையின் பக்கத்தில் உள்ள தலைமன்னாரையும் மற்றும் இந்தியாவின் பக்கத்தில் உள்ள தனுஷ்கோடியையும் இணைக்கும். இந்த திட்டத்தின் பலன்கள் பன்மடங்கு ஆகும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு, மக்களிடையேயான தொடர்பு மற்றும் சுற்றுலா போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதே தொலைநோக்கு பார்வையாகும். நீண்ட கால அர்ப்பணிப்பு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவை புதிய வாய்ப்புகளை திறக்கும்.

India And Sri Lanka Railway Project - இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் சாதகமான பலன்களைப் பெறும் :

தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாத்தியமான பெட்ரோல் குழாய் மற்றும் திருகோணமலைக்கு நில அணுகலை வழங்க இரு நாடுகளை இணைக்கும் (India And Sri Lanka Railway Project) தரைப்பாலம். தற்போது இலங்கையின் தலைமன்னார் மற்றும்  தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப்பாலம் அமைப்பதற்கான திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்தும், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு பகுதியான யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் யாழ்ப்பாணத்தில் ஆலோசனை நடத்தினார்.

கோபால் பாக்லே இந்த சந்திப்புகள் குறித்து கூறியதாவது, “இலங்கை  மற்றும் இந்தியா இடையேயான எரிபொருள் குழாய் திட்டம் ஆனது விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றது.  இந்த திட்டம் ஆனது இலங்கையின் வடக்கு பகுதி வழியாக திருகோணமலையை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும். மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் உள்ள படகு இறங்குதுறை பகுதிகளை ஆய்வு செய்த கோபால் பாக்லே, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை தொடங்குவது குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்றும் மேலும் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் (India And Sri Lanka Railway Project) தொடங்கப்படும்” என்றார்.

இலங்கை மற்றும் இந்தியாவை தரைவழியாக இணைப்பதன் பொருளாதாரத் தாக்கம் ஆனது   மகத்தானது. இந்த தரைவழி சுரங்கப்பாதையின் மூலம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள், பொருட்கள், சேவைகள், பணத்தின் இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி ஆனது எளிதாக மேம்படும். சீனா ஆனது இலங்கையின் வடக்கு பகுதியில் காலூன்ற முயற்சிக்கிறது. இந்தியாவின் தென் பகுதி பாதுகாப்புக்கு இது மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன கடற்படை தடயங்களுடன், “ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் உணர்திறனைக் கருத்தில் கொண்டு இரு நாடுகள் ஒன்றாகச் செயல்படுவது அவசியம்” என்றார். தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் உரை :

India And Sri Lanka Railway Project : மோடி இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக வலியுறுத்தி, “இலங்கை  தமிழர்களின் அபிலாஷைகளை  இலங்கை அரசு ஆனது நிறைவேற்றும் என்றும், சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான மறுகட்டமைப்பு செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என்றும், 13-வது திருத்தத்தை அமல்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று இந்தியா ஆனது நம்புகிறது” என்று கூறியுள்ளார். மேலும், “நமது உறவுகளும் நமது நாகரீகங்களைப் போலவே தொன்மையானவை மற்றும் விரிவானவை. எனவே, ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் உணர்திறன்களை மனதில் கொண்டு நாம் ஒன்றாகச் செயல்படுவது அவசியம்” என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply