India Becomes 3rd Profitable Region For HSBC : இந்தியா சீனாவின் 3-வது இடத்தை பிடித்தது

HSBC (Hongkong And Shanghai Banking Corporation Limited) என்பது உலகின் மிக பழமையான வங்கிகளில் ஒன்று ஆகும். இது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய வங்கி ஆகும். ஹாங்காங்கில் பிரிட்டன் ஆதிக்கத்தின் போது 1860-களில் HSBC Bank ஆனது நிறுவப்பட்டது. தற்போது HSBC Bank ஆனது பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளிலும் தனது  வங்கிச் சேவையை அளித்து வருகிறது. இந்தியாவில் HSBC Bank 1983 ஆம் ஆண்டு முதல் தனது வங்கிச் சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் மும்பையை தலைமையிடமாக கொண்டு 42 ஆயிரம் ஊழியர்களுடன் HSBC Bank ஆனது செயல்பட்டு வருகிறது. இந்த HSBC Bank  2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நிதி அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியா சீனாவின் 3-வது இடத்தை பிடித்தது :

இந்த HSBC Bank-க்கு லாபம் அளித்த நாடுகளில் ஹாங்காங் முதலிடத்திலும் பிரிட்டன் இரண்டாமிடத்திலும் மற்றும் சீனா மூன்றாமிடத்தில் இருந்து வந்தன. தற்போது அந்த மூன்றாமிடத்தை இந்தியா (India Becomes 3rd Profitable Region For HSBC) பெற்றுள்ளது என HSBC Bank தெரிவித்துள்ளது.

India Becomes 3rd Profitable Region For HSBC - இந்தியாவில் HSBC Bank 25% லாபம் அதிகரிப்பு :

2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நிதி அறிக்கையை HSBC Bank ஆனது வெளியிட்டுள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் HSBC Bank ஆனது இந்தியாவில் வங்கி சேவைகள் மூலம் 25% அதிக லாபம் அடைந்திருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது இந்திய செயல்பாடுகளின் மூலம் 2023-ல் வங்கிக்கு 1.51 பில்லியன் அமெரிக்க டாலர் லாபம் கிடைத்துள்ளது என 21/02/2024 புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கீட்டை வரி கழிவுகள் இல்லாமல் HSBC Bank வெளியிட்டுள்ளது. இதுவே இந்தியாவில் வங்கிச்சேவைகள் மூலம் 2022 ஆம் நிதியாண்டில் HSBC Bank-க்கு கிடைத்த லாபம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதற்கு முக்கிய காரணம் இந்திய பொருளாதாரம் ஆனது சீரான நிலையில் வளர்ந்து வருவதே என்று HSBC Bank  கூறியுள்ளது.

இந்திய பொருளாதாரம் வளர்கிறது :

  • HSBC Bank ஆனது அண்மை காலமாக இந்தியா, சிங்கப்பூர், சவுதி ஆகிய நாடுகளில் தங்கள் HSBC Bank-ன் லாபம் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • உலகளாவிய வங்கிச் சேவைகள் மற்றும் சந்தைகள் பிரிவில் HSBC Bank-ன் முதன்மை வருவாய் ஆதாரமாக இந்தியா மாறியுள்ளது. இது முந்தைய 2022-ஆம் ஆண்டில் 62 மில்லியன் டாலர்களில் இருந்து 2023 ஆம் ஆண்டு 774 மில்லியன் டாலர்களாக 24% உயர்ந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கும் கடன் இழப்பு ஒதுக்கீடு என்பது 2022 ஆம் ஆண்டில் 90 மில்லியன் டாலராக இருந்துள்ளது. இது 51 மில்லியன் டாலராக 2023 ஆம் ஆண்டில் குறைந்தது லாபம் கிடைக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரங்கள் 2024 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடையும் என்று HSBC கூறுகிறது.
  • HSBC Bank இந்தியா மற்றும் வியட்நாம் தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளன என தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply