India Final Asia Cup Schedule: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்கிறதா? அட்டவணையை உறுதி செய்த BCCI

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ செயலாளர் ஜெய் சாவை சந்தித்து உறுதி செய்துள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வேண்டும். ஆனால் இந்திய அணி இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. மாறாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வாரியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு பாகிஸ்தானுக்கு வரவில்லை எனில் இந்த வருடம் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது என தெரிவித்துள்ளது.

இதை எடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியாகாமல் இருப்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை பரப்பி வருகின்றன. இதற்கு நடுவில் ஐசிசி அலுவல் கூட்டம் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து நாட்டு கிரிக்கெட் சங்க தலைவர்களும் ஐசிசி கூட்டத்தில் கலந்து கொண்டு முடிவு செய்த பிறகு அட்டவணை வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

ஐசிசி கூட்டம்

இந்த கூட்டம் குறித்து ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் அவர் பேட்டியில் ஆசிய கோப்பைக்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக உள்ள 13 போட்டிகளில் 9 போட்டிகள் இலங்கையிலும் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் நடத்தப்பட உள்ளது.  கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணி ஆசிய கோப்பையில் எப்படி அனைத்து போட்டிகளும் இலங்கையில் விளையாடியதோ அதேபோல இந்த முறையும் விளையாடும். பாகிஸ்தான அணி தனது சொந்த மண்ணில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது.

Latest Slideshows

Leave a Reply