India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு

பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் ‘பொருநை’ (India First Archaeological Documentary Film) உருவாக்கியுள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி

ஹிப் ஹாப் தமிழா தற்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திற்கு இசை அமைக்கிறேன் என்றும் இதுத்தவிர இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். நான் திரை உலகத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே எனக்கு ரசிகர்கள் வரவேற்பும் (India First Archaeological Documentary Film) ஆதரவும் அளித்து வருகிறார்கள். திரையுலகிற்கு வந்த பிறகு என்னுடைய எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள். அதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஹிப் ஹாப் தமிழா பவுண்டேஷன்

திரைத்துறையை தவிர சமூகம் சார்ந்த பிற பணிகளையும் செய்து வருகிறோம். அதற்காக ஹிப் ஹாப் தமிழா ரசிகர்கள் மன்றத்தை ‘ஹிப் ஹாப் தமிழா பவுண்டேஷன்’ என்று அமைப்பு ரீதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏழை மாணவ மாணவிகள், மற்றும் தகுதியானவர்களைத் தேர்வு செய்து அவர்களது கல்லூரி படிப்புக்கு உதவ சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் (India First Archaeological Documentary Film) தகுதியான மாணவ மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களின் உயர் கல்விக்கு உதவ முடிவு செய்யப்பட்டிருக்கிறது என ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

India First Archaeological Documentary Film - Platform Tamil

பொருநை தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப்படம் (India First Archaeological Documentary Film)

கடந்த 2016-ல் தொடங்கி 2019-ம் ஆண்டு வரை தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு உருவானது என்பது பற்றிய வரலாற்று ஆவணப்படமான ‘தமிழி’ என்ற ஆவணப்படத்தை உருவாக்கினோம். இது அனைத்து தரப்பிலும் வரவேற்பு பெற்றுத் தந்தது. இந்த ஆவணப்படத்தை தொடர்ந்து ’பொருநை’ என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப்படம் உருவாக்கலாம் என முடிவு செய்து அதற்கான பணிகளை (India First Archaeological Documentary Film) மேற்கொண்டோம். 2021-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களின் தொல்லியல் ஆராய்ச்சியைக் கண்டறிய தமிழகத்தின் பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டனர். தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் அனுமதியுடன் ஆவண படமாக்க 2021-ம் ஆண்டு முதல் பொருநை தொல்லியல் ஆராய்ச்சி படப்பிடிப்பைத் தொடங்கினோம். இந்த ஆராய்ச்சியில் நிச்சயம் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வந்தனர். எங்களுக்கும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இந்த ஆராய்ச்சியில் தற்போது உண்மையாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் உலக அளவில் இரும்பு கலாச்சாரம் தமிழ் மண்ணில் தான் தொடங்கியது என்ற கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது குறித்து அறிவித்தார். இந்த அறிவிப்பானது உலகையே தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் இதற்கு முன்பு இரும்பு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது துருக்கி நாட்டில் தான் என குறிப்பிடப்பட்டு வந்தது. பழமையான இரும்பு கலாச்சாரம் தமிழகத்தில் தான் தோன்றியது என்ற வரலாற்று உண்மை வெளியாகி அந்த வரலாற்றை மாற்றியிருக்கிறது.

இந்தியாவில் தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்வை முழுவதுமாக ஆவணப்படுத்துவது இதுதான் முதல்முறை. 2021-ம் ஆண்டு முதல் நடந்து வந்த இந்த பணியில் மணிக்கணக்கில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக முக்கிய தகவல்களை மட்டுமே தேர்வு செய்து ஆவணப்படத்தை சுருக்கி கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். படப்பிடிப்பு பணிகள் முழுவதும் 2 மாதத்தில் முடிக்கப்பட்ட பிறகு உலக முழுவதும் கொண்டு செல்லும் வகையில் உலக திரைப்பட விழாக்களில் இந்த படத்தை (India First Archaeological Documentary Film) திரையிட முடிவு செய்திருக்கிறோம். பின்னர் இந்த ஆவணப்படத்தை தமிழ் மக்களுக்கு பொதுவுடைமையாக வழங்க தயாராக இருக்கிறோம் என்று ஹிப் ஹாப் ஆதி கூறினார்.

Latest Slideshows

Leave a Reply