India First Hypersonic Missile Test : இந்தியாவின் முதல் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிக்கரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் இந்தியாவின் முதல் “ஹைப்பர்சோனிக்” ஏவுகணை (India First Hypersonic Missile Test) சோதனையானது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவில் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.     

நம் இந்தியாவின் பாதுகாப்புக்காக முப்படைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வான்வெளி பாதுகாப்புக்கு பல்வேறு ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வான்வெளி பாதுகாப்புக்கு இந்தியாவில் பிரம்மோஸ் ஏவுகணை மட்டுமே உள்ளது. இதன் அடுத்தகட்டமாக அதிக தூரத்துக்கு சென்று மிக துல்லியமாக இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி (India First Hypersonic Missile Test)

அந்த வகையில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் Defence Research and Development Organisation (DRDO) மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் வெகு தூரம் சென்று இலக்குளை தாக்கி அழிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை (India First Hypersonic Missile Test) சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது. மேலும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளன. தற்போது இந்த வரிசையில் நம் இந்தியாவும் இணைந்துள்ளது.

துல்லியமாக இலக்கை தாக்கும்

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒளியின் சராசரி வேகத்தை விட 25 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியதாகும். அதாவது ஒரு வினாடியில் 5 மைல் வேகத்தில் சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி (India First Hypersonic Missile Test) அழிக்கும். மேலும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணையில் இருந்து முழுவதும் வேறுபட்டது ஆகும். மேலும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் எச்ஜிபி எனும் ஹைப்பர்சோனிக் மற்றும் ஹைப்பர்சோனிக் குரூஸ் என இரண்டு வகைகள் உள்ளன. இதில் ராக்கெட் பூஸ்டர் மூலமாக எச்ஜிபி ஹைப்பர்சோனிக் ஏவப்படும். மேலும் ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை ஸ்க்ராம்ஜெட் இன்ஜின்கள் மூலமாக செயல்படும். ஆனால் இவை இரண்டும் குறைந்த உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.    

பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் DRDO உருவாக்கியுள்ள இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒரு வரலாற்று சாதனையாகும் என தெரிவித்துள்ளார். மேலும் இதனால் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்கள் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் நம் இந்தியாவும் இணைந்துள்ளது (India First Hypersonic Missile Test) என தெரிவித்தார். இந்த வெற்றிகரமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைக்காக DRDO மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply