India G20 Presidency 2023 : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பாராட்டு

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதம மந்திரி திரு.ரிஷி சுனக் பாராட்டு

India G20 Presidency 2023 :

சரியான நேரத்தில் G20 தலைமை பதவியை வகிக்க  தகுதியுள்ள சரியான நாடு இந்தியா (India G20 Presidency 2023 ) என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 06/09/2023 புதன்கிழமை அன்று கூறினார். நரேந்திர மோடியின் கடந்த ஆண்டு தலைமையைப் பாராட்டிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தற்போது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அதன் அசாதாரண வெற்றிகள் G20 தலைமை பதவியை வகிக்க மிகவும் தகுதியுள்ள நாடு இந்தியா என்று பாராட்டி மிகவும் புகழ்ந்துள்ளார்.

India G20 Presidency 2023 : இந்தியா ஆனது இது போன்ற உலகளாவிய தலைமையை காட்டுவதை பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய தலைமைத்துவத்தைக் இந்தியா காட்டுகிறது - India Showing Global Leadership

எண்ணிலடங்கா சவால்களை உலகம் ஆனது எதிர்கொள்ளும் போது இந்த கூட்டமைப்பு வந்தது. G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த சுனக்கின் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. “இங்கிலாந்து ஆனது உலகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது முதல் பருவநிலை மாற்றத்தைக் கையாள்வது வரை உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள G20 தலைவர் பதவியில் உள்ள இந்தியாவுடன் நெருக்கமாக இங்கிலாந்து பணியாற்றும்” என்று திரு.சுனக் கூறினார்.

“இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஆனது நிகழ்காலத்தை வரையறுப்பதை விட அதிகமாக இரு நாடுகளின் எதிர்காலத்தை வரையறுக்கும்” என்றார் திரு.சுனக். பிரிட்டிஷ் பிரதம மந்திரி உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை குறிப்பிட்டு, ஒரு இறையாண்மை கொண்ட அண்டை நாடு மீது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தண்டனையின்றி படையெடுக்க அனுமதித்தால், அது முழு உலகிற்கும் “பயங்கரமான விளைவுகளை” ஏற்படுத்தும்” என்று வலியுறுத்தினார்.

“சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாடாக தனது எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது. தனது படைகளை திரும்பப் பெறுவதன் மூலம் புடினுக்கு நாளை இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் சக்தி உள்ளது” என்று திரு.சுனக் மேலும் கூறினார்.

இங்கிலாந்தில் காலிஸ்தானிக்கு ஆதரவான சக்திகளின் செயல்பாடுகள் குறித்த இந்தியாவின் கவலை

தற்போது, இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஆழமான உறவுகளுக்கு காலிஸ்தானி பிரச்சினை ஆனது முட்டுக்கட்டையாக இருப்பதாக டெல்லியில் ஒரு கருத்து நிலவுகிறது. லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை காலிஸ்தான் சார்பு சக்திகள் தாக்கி கட்டிடத்தின் முன்புறத்தில் இருந்த ஒரு கம்பத்தில் இருந்து இந்திய தேசியக் கொடியை கீழே இழுத்ததை அடுத்து இந்தியா கோபமடைந்தது.

லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கடந்த மார்ச் மாதம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்குப் பிறகு, இங்கிலாந்தில் காலிஸ்தானிக்கு ஆதரவான சக்திகளின் செயல்பாடுகள் குறித்து இந்தியாவில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம்  இரு நாடுகளுக்கும் இடையே தீவிரவாதம் மற்றும் ஊழலின் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்காக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்தாட் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் S.ஜெய்சங்கரை சந்தித்து கவனம் செலுத்திய சந்திப்பை திரு.சுனக்  குறிப்பிட்டார்.

எந்த வகையான தீவிரவாதம், வன்முறை மற்றும்  பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் இங்கிலாந்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் வன்முறை, பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை சீர்குலைக்கவும் எதிர்க்கவும் உரிய கடமையை மிகவும் தீவிரமாக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்” என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் காலிஸ்தானிக்கு ஆதரவான சக்திகளின் செயல்பாடுகள் குறித்த இந்தியாவின் கவலையைப் போக்கி, “காலிஸ்தான் சார்பு தீவிரவாதத்தின் அச்சுறுத்தல்கள்  மற்றும் வன்முறைச் செயல்களைச் சமாளிக்க பிரிட்டிஷ் காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது” என்று பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். “இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஆனது நிகழ்காலத்தை வரையறுப்பதை விட அதிகமாக இரு நாடுகளின் எதிர்காலத்தை வரையறுக்கும்” என்று பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply