India Has Been Dominating Chess Olympiad : செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வெற்றி நடை போட்டு வருகிறது

India Has Been Dominating Chess Olympiad :

இந்திய நாடு செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி நடை போட்டு வருகின்றது - 32 ஆட்டங்களில் ஒரு தோல்வி கூட இல்லை :

புடாபெஸ்ட் நகர் ஆனது ஹங்கேரி நாட்டில் உள்ளது. இந்த புடாபெஸ்ட் நகரில் தான் உலக புகழ்பெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் ஆனது நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த செஸ் தொடர் ஒலிம்பியாட் போட்டியில், இதுவரை 32 ஆட்டங்களில் இந்தியர்கள் சிறப்பாக விளையாடி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி பெறாமல் வெற்றி நடை போட்டு (India Has Been Dominating Chess Olympiad) வருகின்றனர்.

இந்திய அணி தங்கப்பதக்க கனவை நோக்கி முன்னேறி வருகிறது :

இந்த தொடரில் குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் அர்ஜூன் எரிகேசி ஆகியோர் ஆடவர் பிரிவில் வெற்றி பெற்றனர். இந்த தொடரில் 8வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா டிரா செய்தார். இந்திய அணி 3.5 புள்ளிகளை பெற்று அசத்தல் வெற்றியை (India Has Been Dominating Chess Olympiad) பதிவு செய்தது. தனது 8வது சுற்றில் இந்திய அணி ஆனது ஈரான் அணியை எதிர்கொண்டது. ஈரான் அணி ஆனது இந்தியாவைப் போலவே 8 சுற்று வரை ஒரு தோல்வி கூட பெறாமல் அதிரடியாக ஆடி வந்திருந்தது. ஆனால் இந்த சுற்றில் ஈரான் ஆனது மூன்று முறை தோற்கடிக்கப்பட்டது.

8 சுற்றுகள் முடிவில் இந்திய ஆடவர் அணி ஆனது 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தற்போது இந்திய ஆடவர் அணி, தனது 9வது சுற்றில் நடப்பு சாம்பியன் உஸ்பெகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. 8வது சுற்றில் போலந்து அணியுடன் விளையாடிய மகளிர் அணி (இந்தியாவின் ஹரிகா துரோணோவள்ளி மற்றும் வைஷாலி) தோல்வியை தழுவிய போதும், இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் முக்கியமான நகர்த்தலில் போட்டியை டிரா செய்தார். வெற்றி பெற்ற திவ்யா தேஷ்முக் ஆறுதல் அளித்தார். இந்திய மகளிர் அணி ஆனது 1.5 புள்ளிகளை மட்டுமே பெற்றபோதும் தற்போது பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணி தற்போது 9வது சுற்றில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.

Latest Slideshows

Leave a Reply