India Imposes 20% Export Duty On Rice : அரிசியின் மீது புதிய வரிகளை விதிக்கும் மத்திய அரசு

இந்த வருடம் பருவ மழையினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. உணவுப் பொருட்கள் உற்பத்தியிலும் இதுவே நிலையாக உள்ளது. இந்த காரணத்தினால் தான் காய்கறி, பழங்கள், பூக்கள் ஆகியவை தன்னுடைய அடிப்படை விலையில் இருந்து அதிகமாக விற்கப்படுகின்றன. அடிப்படை உணவாக இருக்கின்ற அரிசி கோதுமை பருப்பு ஆகியவற்றிலும் பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூலம் இந்த இரு நாடுகளிடமிருந்து வரும் உணவுப் பொருட்கள் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் உலக நாடுகள் அனைத்தும் அரிசிக்காக இந்தியாவை மட்டுமே நம்பி இருக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

இந்திய நாடானது முக்கியமான விவசாய நாடாகும். விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பது பழமையான கருத்தாகும். நம் இந்திய நாட்டில் மட்டுமே அதிகப்படியான அரிசிகள் மற்றும் கோதுமைகள் விளைவிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு நமது மத்திய அரசு பாஸ்மதி இல்லாத புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கான வரிகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. பாஸ்மதி அரிசி வகைகளுக்கு விலையை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரிசி அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆகும். இதனைப் போன்று இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி சற்று கட்டுப்படுத்தப்பட உள்ளது.

India Imposes 20% Export Duty On Rice :

India Imposes 20% Export Duty On Rice : உலகின் அதிகப்படியான மக்களின் முக்கிய உணவாக இருப்பது அரிசி தான். இதன் ஏற்றுமதிக்கு இந்திய நாடு சிலர் மாதங்களுக்கு முன்பு தடை விதித்திருந்த நிலையில் அரிசியின் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் புழுங்கல் அரிசிக்கு மேலும் விலையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதேபோன்று பாஸ்மதி அரிசி ஒரு டன்னுக்கு 1250 டாலர் என குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க உள்ளது. பாஸ்மதி அல்லாத புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கு 20% ஆக (India Imposes 20% Export Duty On Rice) மாற்ற மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

இந்தியாவில் அரிசியின் விலை ஒரு கிலோவிற்கு 37 ரூபாய் என்று சந்தையில் விற்கப்பட்டு வந்தது. இது இந்த ஆண்டு முதல் 41 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனைப் போன்றே புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி 2.5 மில்லியன் டன் அளவு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 3.2 மில்லியன் டன் அளவாக உயர்ந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply