India Jumps To 2nd Position : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி

India Jumps To 2nd Position - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் :

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்த வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. தொடர் தொடங்கும் முன் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (India Jumps To 2nd Position) இருந்தது. ஆனால் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வியால் இந்தியா புள்ளிகளில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது இந்திய அணி மூன்று இடங்கள் முன்னேறி பழைய இரண்டாவது இடத்திற்கு (India Jumps To 2nd Position) திரும்பியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி 55 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 52.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும், அதே 50 புள்ளிகளுடன் வங்கதேசம் ஐந்தாவது இடத்திலும், 36.6 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் உள்ளன. மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நீண்ட காலம் முதலிடத்தில் இருக்கும். தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இரண்டாம் இடத்திற்கு செல்லும். இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு நழுவ வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது தான். இதனால் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply