India Largest Growing Economy : இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது.
India Largest Growing Economy
இந்தியா ஆனது தொடர்ந்து உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக (India Largest Growing Economy) திகழ்ந்து வருகிறது. இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது.
IMF ஆனது இந்தியாவின் வளர்ச்சி சீர்திருத்தங்களுக்கான 3 முக்கிய பகுதிகளை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவின் சீர்திருத்த முன்னுரிமைகள் ஆனது வேலைகள் மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சிகள் – போட்டித்தன்மையை அதிகரிப்பது மற்றும் அதுவே வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுதல் தற்போதுள்ள வர்த்தக தடைகளை கடைதல் – வர்த்தகத்தை தாராளமயமாக்கும்போது, உற்பத்தி நிறுவனங்கள் வாழ அனுமதிக்கப்படுதல். உள்கட்டமைப்பு துறைகள் வளர்ச்சி – உள்கட்டமைப்புத் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர கவனம் செலுத்துதல் ஆகிய மூன்று பகுதிகளில் இருக்க வேண்டும் என IMF ஆனது பரிந்துரைத்துள்ளது.
உலக அளவில் உள்ள பல நாடுகளிலும் Corona நோய்த் தொற்றுகள் பல வகையான பொது முடக்கங்கள், மற்றும் உக்ரைன்-ரஷியா போர் போன்ற பல காரணங்களால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பிரிட்டன் போன்ற பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் வட்டி விகிதங்களும் அந்தந்த நாடுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியா ஆனது பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் பிரிட்டன் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புளூம்பெர்க் ஊடக நிறுவனம் ஆனது சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ள போதிலும், பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்தியா வலுவடைந்தே உள்ளது எனக் கூறியுள்ளது.
IMF (சர்வதேச நிதியம்) ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன், இதற்கு முக்கியக் காரணம் 2021-ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததே ஆகும். மேலும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் (India Largest Growing Economy) நன்றாக இருப்பதால் 24-25 நிதியாண்டில் 7% வளர்ச்சியும் மற்றும் 4.4 சதவீதமாக பணவீக்க குறைவும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், சில ஏற்ற இறக்கங்கள் FY24-25-ல் உள்ள போதும் உணவுப் பொருட்களின் விலைகள் இயல்பாக்கப்படுகின்றன. பொதுவாக, இந்தியாவைப் பொறுத்தவரை மேக்ரோ அடிப்படைகள் இருப்பு நிலை நன்றாக உள்ளது. தேர்தல்கள் நடந்தபோதும், இந்தியா நிதி ஒருங்கிணைப்பு பாதையிலேயே உள்ளது.