India Lost In The 3rd Test Against New Zealand : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் (India Lost In The 3rd Test Against New Zealand) இந்திய அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

3வது டெஸ்ட்

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 28 ரன்கள் (India Lost In The 3rd Test Against New Zealand) முன்னிலை பெற்றது. பிறகு 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2-வது ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 171 ரன்கள் எடுத்தது. பின்னர் 3-வது நாள் ஆட்டத்தில் 3 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு (India Lost In The 3rd Test Against New Zealand)

2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி வெறும் 29 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. பின்னர் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா கூட்டணி இணைந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் 42 ரன்கள் எடுத்தபோது ஜடேஜா வெறும் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 ரன்களுக்கு அஜாஸ் பட்டேல் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷப் பண்ட் அவுட் ஆனதால் (India Lost In The 3rd Test Against New Zealand) இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர். பின்னர் ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கூட்டணி நிதானமாக ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி வெற்றி

இந்தியா வெற்றி பெற 26 ரன்கள் தேவை என்ற நிலையில் அஸ்வின் 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் 12 ரன்கள் மட்டுமே எடுத்த வாஷிங்டன் சுந்தரும் போல்டாகி வெளியேறினார். இந்திய அணி 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் (India Lost In The 3rd Test Against New Zealand) இழந்தது. மேலும் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

Latest Slideshows

Leave a Reply