India Ranks 4th In Foreign Exchange Position : இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை

India Ranks 4th In Foreign Exchange Position :

இந்தியா அந்நிய செலாவணி கையிருப்பு $700 பில்லியன் குறியை தாண்டிய 4வது நாடாகும். முதன்முறையாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை (India Ranks 4th In Foreign Exchange Position) செய்துள்ளது. உலகில் இந்தியா ஆனது சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக 700 பில்லியன் டாலர்களுக்கு மேல் கையிருப்பைக் கொண்டுள்ள நான்காவது பொருளாதார அந்தஸ்த்தை பெற்ற நாடாகும். ஒரு நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளை ஸ்த்திர தன்மையுடன் நல்ல நிலையில் வைத்திருப்பதில் அந்நிய செலாவணி கையிருப்பு ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஆனது குறைந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஆனது நெருக்கடிக்கு உள்ளாகும்.

இந்த 2024ல் இதுவரை இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது $87.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த $87.6 பில்லியன் உயர்வானது கடந்த 2023 ஆம் ஆண்டு முழுவதும் ஏற்பட்ட உயர்வான $62 பில்லியனை விட அதிகமாகும். Reserve Bank-ன் புள்ளிவிவரங்கள், சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் கையிருப்பு ஆனது 3 கோடி டாலர் அதிகரித்து 468 கோடி டாலராக உள்ளது என்று தெரிவிக்கின்றன. நாட்டின் தற்போதைய தங்கம் கையிருப்பு ஆனது 89.3 கோடியிலிருந்து 6,099.7 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பின் வளர்ச்சி :

  • கடந்த Aug 2, 2024 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணியானது 3 கோடி டாலர் அதிகரித்து 67,491.9 கோடி டாலர் என்ற உச்சத்தை பெற்றிருந்தது.
  • கடந்த Aug 16, 2024 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணியானது 6 கோடி டாலர் அதிகரித்து 67,466.4 கோடி டாலராக இருந்தது.
  • கடந்த Aug 23, 2024 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 702.3 கோடி டாலர் அதிகரித்தது. அது 68,168.8 கோடி டாலர் உச்சத்தை பெற்றது.
  • கடந்த செப்டம்பர் 27, 2024 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றிருந்தது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு எதிராக இந்தியாவின் திறனை இந்த அந்நிய செலாவணி கையிருப்பின்  கூர்மையான அதிகரிப்பு ஆனது (India Ranks 4th In Foreign Exchange Position) வலுப்படுத்துகிறது. மேலும் நிலையற்ற சர்வதேச சந்தைகளை எதிர்கொள்ளும் போது அதன் நாணயத்திற்கு அதிக ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.

Latest Slideshows

Leave a Reply