India Series After World Cup : கோலி, ரோஹித் ஓய்வுக்கு பிறகு இந்தியா விளையாடப்போகும் தொடர்

மும்பை :

இந்திய கிரிக்கெட் அணி தற்போது பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தியா தற்போது இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் பிறகு மார்ச் முதல் மே வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அதன் பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி 2007ல் தான் ஐசிசி டி20 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு அந்தத் தொடரில் நாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது. அதன்பிறகு, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் இந்திய டி20 அணியில் (India Series After World Cup) மீண்டும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இணைந்துள்ளனர்.

India Series After World Cup :

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் அவர்களுக்கு கடைசி வாய்ப்பு. இந்த தொடருக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவை எடுக்கவுள்ளனர். டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, இந்திய அணி எந்த தொடரில் விளையாடும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு பதில் தற்போது கிடைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை ஜூன் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில், இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது, ஆனால் அந்த தொடருக்கு முன்னதாக, பிசிசிஐ புதிய தொடரை அறிவித்துள்ளது.

India Series After World Cup : அதன்படி, டி20 உலகக் கோப்பை முடிவடைந்த பிறகு, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது. முதல் டி20 ஜூலை 6 ஆம் தேதியும், இரண்டாவது டி20 ஜூலை 7 ஆம் தேதியும், மூன்றாவது டி20 ஜூலை 10 ஆம் தேதியும், நான்காவது டி20 ஜூலை 13 ஆம் தேதியும், ஐந்தாவது டி20 ஜூலை 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முழுத் தொடர் ஹராரேயில் நடைபெறுகிறது. ஒரே ஒரு போட்டி மட்டும் இரவு ஆட்டமாக விளையாடப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியாவுக்கு (India Series After World Cup) இது முதல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply