India Squad For Afghanistan T20 : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

மும்பை :

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி (India Squad For Afghanistan T20) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்பதால் இந்த தொடரில் அனைத்து முக்கிய வீரர்களையும் ஆப்கானிஸ்தான் களமிறக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய பலம் சுழற்பந்து வீச்சாளர்கள். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களான முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி ரஷித் கான் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். சமீபத்திய உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ஹஸ்ரத்துல்லா ஜசாய், ஆல்ரவுண்டர் அஜ்முல்லா ஒமர்சாய் ஆகியோர் பேட்டிங்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

India Squad For Afghanistan T20 :

இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாமல், கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை டி20 போட்டிகளில் வென்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முடிவு செய்து வலுவான அணியை (India Squad For Afghanistan T20) அறிவித்துள்ளது. டி20 போட்டிகளில் எதுவும் நடக்கலாம் என்பதால் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி டி20 சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் தற்போது அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வருவதால் உத்தேச அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது ஒன்றே ஆப்கானிஸ்தானை தடுத்து நிறுத்துகிறது.

ஆப்கானிஸ்தான் அணி :

இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சத்ரன், முகமது நபி, கரீம் ஜனத், அஜ்முல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், ஃபஜ்மான் அஷ்ரஃப், முஜீப், உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்படின் நைப் மற்றும் ரஷித் கான்.

Latest Slideshows

Leave a Reply