India To Bharat : இந்தியாவின் பெயர் 'பாரத்'என்று மாறுகிறது ?

India To Bharat :

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவது தான் (India To Bharat) தற்போது ஹாட் டாப்பிக். இணையதளம் முழுக்க இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பெயரை “பாரத குடியரசு” என்று மாற்றப்படுவதாக தகவளானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பெயர் மாற்றமானது பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் அவர்களின் பல ஆண்டு கனவு நிறைவேற்றப்படும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய அரசியலமைப்பில் சீர்திருத்தும் :

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்ற பெயரை நீக்கி வெறும் ‘பாரத்’ (India To Bharat) என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம். இப்போது இருக்கும் இந்தியா, அதாவது பாரத் என்று அழைக்கப்பட உள்ளது. இதை “பாரத குடியரசு” என்று மாற்ற மத்தியில் ஆட்சி செய்யும் மாநில அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் மாநில அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத்தலைவர் மாளிகையானது ‘பாரத குடியரசுத்தலைவர்’ என அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் Sep 09-10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடக்கவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் ‘பாரத குடியரசுத்தலைவர்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் முக்கிய முடிவு :

செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை ‘பாரத குடியரசு’ என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் 18 – 22 வரை இந்த சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய நிலையில் தான் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (செப்.6) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது (India To Bharat) தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முகமது அலீ ஜின்னாவின் கனவு :

அத்வைத் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், நாம் 1947 இல் சுதந்திரம் பெற்ற போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இருநாடுகளாக பிரிந்தது. அப்போது முகமது அலி ஜின்னா “இந்தியா”என்ற பெயரை முற்றிலுமாக எதிர்த்தார், ஜின்னா அவர்களின் கருத்துப்படி, ‘இந்தியா’ என்பது முழு துணைக்கண்டத்தையும் உள்ளடக்கியது. அதாவது ‘சிந்து சமவெளி’ முதல் எல்லா பகுதியையும் உள்ளடக்கியதே இந்தியா. ‘இண்டஸ் வேலி’ பகுதி முழுக்கவே இந்தியா. அதனால் இந்தியாவிற்கு இந்தியா என்று பெயர் வைக்க கூடாது, என்றார்.

முகமது அலி ஜின்னா இந்தியா என்ற பெயருக்கு பதிலாக “இந்துஸ்தான்” என்ற பெயரை பரிந்துரைத்தார், ஆனால் அப்போதைய பாரத பிரதமர் நேரு அவர்கள் இந்த திட்டத்தை நிராகரித்து நமது தேசத்திற்கு “இந்தியா” என்று பெயரிட்டார். 76 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்னாவின் அவரின் விருப்பத்தை மாநில அரசு நிறைவேற்றுகிறது என்று அத்வைத் வரலாற்று ஆய்வாளர் குறிப்பிட்டு உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply