India Vs Bangladesh Pitch Report : இந்தியா vs வங்கதேசம் பிட்ச் ரிப்போர்ட் என்ன?

India Vs Bangladesh Pitch Report :

இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி நடக்கும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தின் பிட்ச் மற்றும் பிட்ச் அறிக்கையை (India Vs Bangladesh Pitch Report) பாருங்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்கிறது வங்கதேச அணி. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்துள்ளது.

இதனால் வெற்றியை தொடர இந்திய அணியும், வெற்றி பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் வங்கதேச அணியும் களமிறங்கும். 2007 உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி கொடுத்த அதிர்ச்சியை இந்திய அணி மற்றும் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் கூட வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இதுவரை இந்திய அணி 31 ஆட்டங்களிலும், வங்கதேச அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பங்களாதேஷ் அணியை பொறுத்த வரையில் அன்றைய தினம் போட்டி கைகோர்த்து சென்றால் எந்த அணியையும் எளிதாக வீழ்த்தி மைதானத்தில் மறக்க முடியாத நிகழ்வை நிகழ்த்தி விடுவார்கள்.

பேட்டிங் சொர்க்கம் :

இதன் காரணமாக வங்கதேச அணியுடன் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். இவ்விரு அணிகள் மோதும் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. மைதானம் பெரும்பாலும் “பேட்டிங் சொர்க்கம்” என்று குறிப்பிடப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்த மைதானத்தில் களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தும். இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்த மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு சாதகமாக இருக்கும். கடந்த 7 போட்டிகளில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் சேசிங் எளிதாக இருக்காது. இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை மனதில் வைத்து இரு அணிகளுக்கும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், இரு அணிகளுக்கும் இடையே சிறு போட்டி நிலவுவதால், போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply